• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கேள்விக்கேட்ட முதலமைச்சருக்கு அதிர்ச்சி பதில் கொடுத்த ஆசிரியர்கள்!

கேள்விக்கேட்ட முதலமைச்சருக்கு அதிர்ச்சி பதில் கொடுத்த ஆசிரியர்கள்!

அசோக் கெலாட்

அசோக் கெலாட்

அசோக் கெலாட், “பணியிட மாற்றம் செய்யப்படுவதற்கு லஞ்சம் கேட்கப்படுவதாக கூறப்படுகிறது.. இது உண்மையா ”என கேட்டார். அதற்கு ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக ஆம் என கூறி அதிர்ச்சி அளித்தனர்.

  • Share this:
    ராஜஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதலமைச்சர் அசோக் கெலாட் ஆசிரியர்களை நோக்கி எழுப்பிய கேள்விக்கு அவர்கள் அளித்த பதில், அவரை சங்கடத்திற்குள்ளாக்கியது.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஆசிரியர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முதலமைச்சர் அசோக் கெலாட்,  பள்ளிக் கல்வி அமைச்சர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய அசோக்  கெலாட் பணி மாறுதல்களில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டிய தேவை உள்ளதாக  குறிப்பிட்டார்.

    மேலும்,  ‘ பணி மாறுதல்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என நான் கேள்விப்பட்டேன். அது உண்மையா என்று தெரியவில்லை.. பணம் கொடுக்க வேண்டுமா?’ என்று அசோக் கெலாட் கேள்வி எழுப்பினார்.அப்போது அங்கிருந்த ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக “ஆம்” என்று பதிலளித்தனர். இந்த பதிலை சற்றும் எதிர்பாராத முதலமைச்சர் அசோக் கெலாட் சங்கடத்துக்கு உள்ளானார்.

    பின்னர், பணியிட மாற்றத்துக்கு ஆசிரியர்கள் பணம் கொடுக்க வேண்டியுள்ளது என்பது துரதிருஷ்டவசமானது. விரைவில் இது தொடர்பாக  திட்டம் வகுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    முதலமைச்சரை தொடர்ந்து உரையாற்றிய கல்வி அமைச்சர்கோவிந்த் சிங் தோதாஸ்ரா, ‘பணம் கொடுத்து இடமாறுதல் பெற ஆசிரியர்கள் துடிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.  நானும் முதலமைச்சரும் பதவியில் இருக்கும்போதே இதற்கான திட்டம் வகுக்கப்பட்டு பணம் கொடுக்கும் முறை ஒழிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

    மேலும் படிக்க: தமிழகம்- புதுச்சேரி ஆட்டோ இயக்க அனுமதி பெறவேண்டும்- உயர் நீதிமன்றம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: