Home /News /national /

கோதுமையை இறக்குமதி செய்யும் திட்டமோ, தேவையோ இல்லை - மத்திய அரசு விளக்கம்!

கோதுமையை இறக்குமதி செய்யும் திட்டமோ, தேவையோ இல்லை - மத்திய அரசு விளக்கம்!

கோதுமை ஏற்றுமதி

கோதுமை ஏற்றுமதி

Wheat | உணவு மற்றும் பொது விநியோகத்துறை சார்பில், விளக்கம் அளிக்கப்பட்டபோது, இறக்குமதிக்கான தேவை எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நாட்டில் கோதுமை இறக்குமதி செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கான கோதுமை இருப்பு உள்ளது என்றும், பொது விநியோகத்திற்கு தேவையான கோதுமையை இந்திய உணவுக் கழகம் இருப்பு வைத்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, நாட்டில் கோதுமை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் வெளிநாடுகளில் இருந்து கோதுமை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன. இதுகுறித்து உணவு மற்றும் பொது விநியோகத்துறை சார்பில், ஞாயிற்றுக்கிழமை விளக்கம் அளிக்கப்பட்டபோது, இறக்குமதிக்கான தேவை எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

    டிவிட்டரில், இந்தத் துறை சார்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட பதிவில், “இந்தியாவுக்கு கோதுமை இறக்குமதி செய்வதற்கான திட்டம் எதுவும் இல்லை. உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு நாட்டில் இருப்பு உள்ளது. பொது விநியோகத்திற்கும் சிக்கல் வராது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஊடகங்களில் வெளியான செய்திகள்

    முன்னதாக, உள்நாட்டில் பற்றாக்குறை காரணமாக கோதுமை விலை அதிகரித்து வருகிறது என்றும், இதனால் இறக்குமதியை ஊக்குவிக்கும் வகையில் கோதுமை மீதான 40 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்ய அரசு திட்டமிட்டு வருவதாகவும் ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. வெளிநாடுகளில் இருந்து கோதுமை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு அதிகாரிகள் செய்து வருகின்றனர் என்று ப்ளும்பெர்க் என்ற ஊடகம் கூறியிருந்தது.

    Read More : நீங்க கோபப்பட்டா பேசமாட்டான்.. உணர்வுகளை புரிந்துக்கொள்ளும் ரோபோ..! - சென்னை மாணவனின் அசர வைக்கும் கண்டுபிடிப்பு


    மார்ச் மாதத்தில் ஏற்பட்ட உற்பத்தி அபாயம்

    கடந்த மார்ச் மாதத்தில் வரலாறு காணாத அளவில் வெப்பம் உச்சத்தில் இருந்த காரணத்தால், இந்தியாவில் கோதுமை உற்பத்தி பாதிக்கப்படும் என்று கருதப்பட்டது. இதைத் தொடர்ந்து, நாட்டில் கோதுமை விலை உயரத் தொடங்கியது.

    கடந்த ஓராண்டு முன்னர் கோதுமையின் தினசரி சாராசரி விலை என்பது கிலோவுக்கு ரூ.24.71ஆக இருந்தது. இந்த ஆண்டு அது 19.34 சதவீதம் அதிகரித்து 29.49 என்று ஆனது. இதற்கிடையே, உள்நாட்டு சந்தையில் உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மே மாதத்தில் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.

    ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு

    மைதா, செமோலினா மற்றும் அனைத்து விதமான கோதுமை சார்ந்த மாவு பொருட்களின் ஏற்றுமதிக்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் தடை விதிப்பதற்கான உத்தரவை இந்த மாத தொடக்கத்தில் அரசு பிறப்பித்தது.

    கோதுமை உற்பத்தி கொஞ்சம் சரிவு

    2021 - 2022 சாகுபடி ஆண்டில் இந்தியாவில் ஒட்டுமொத்த உணவு தானிய உற்பத்தி என்பது, முன்னெப்போதும் இல்லாத வகையில் 315.72 மில்லியன் டன் என்ற அளவுக்கு உயர்ந்தது என்ற போதிலும், கோதுமை உற்பத்தி 3 சதவீதம் சரிந்து 106.84 மில்லியன் என்ற அளவில் உள்ளது.

     
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: India, Wheat

    அடுத்த செய்தி