நாட்டில் போதுமான அளவு கொரோனா தடுப்பூசிகள் உள்ளன; எதிர்கட்சிகள் அரசியல் செய்கின்றன - பிரதமர் மோடி

மோடி

நாட்டில் போதுமான அளவு கொரோனா தடுப்பூசி உள்ளது. எதிர்கட்சிகள் அரசியல் செய்கின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில் எதிர்கட்சிகள் பெகாசஸ் பிரச்னை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டுவருகின்றன. இந்தநிலையில், இன்றைய கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு பா.ஜ.க எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.

  இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், ‘கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது என்று யாரும் அச்சப்படத் தேவையில்லை. போதுமான தடுப்பூசிகள் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. ஆனால், துரதிருஷ்டவசமாக எதிர்கட்சிக்ள இந்த விவகாரத்தில் அரசியல் செய்கின்றன. தடுப்பூசிகள் வீணாவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து மக்களுக்கு இருக்கும் அச்சத்தைப் போக்க மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். மிகுந்த வருத்தத்துக்குரிய விஷயமாக இந்தியத் தலைநகரில் 20 சதவீத முன்களப் பணியாளர்கள் இன்னமும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த நாட்டில் இரண்டு மூன்று மாநிலங்களுக்குகள் சுருக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியால் இரண்டாவது முறையாக மக்களால் அதிகப்படியான தொகுதிகளில் பா.ஜ.கவை வெற்றி பெற வைக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், அவர்களுக்கு பா.ஜ.க பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வருவதற்கு எத்தனை போராட்டங்களை எதிர்கொண்டது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. எதிர்கட்சிகள் மசோதாக்களை முடக்கவிடாமல் இருப்பதற்கு பா.ஜ.க எம்.பிக்கள் அனைவரும் நாடாளுமன்றத்துக்கு தொடர்ந்து வருகை தரவேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
  Published by:Karthick S
  First published: