பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு - வால் ஸ்டிரிட் ஜெர்னல் கட்டுரைக்கு பதிலளித்த ஃபேஸ்புக்

பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு - வால் ஸ்டிரிட் ஜெர்னல் கட்டுரைக்கு பதிலளித்த ஃபேஸ்புக்

கோப்புப் படம்

எந்த கட்சிக்கோ அல்லது அரசியல் சித்தாந்தத்துக்கோ ஆதரவாக எங்கள் தளம் செயல்படவில்லை என்று ஃபேஸ்புக் விளக்கமளித்துள்ளது.

  • Share this:
    பா.ஜ.க தலைவர்களின் வெறுப்பு பேச்சுகளையும், ஆட்சேபிக்கக் கூடிய கருத்துகளையும் ஃபேஸ்புக் கண்டுகொள்வதில்லை என்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல அமெரிக்க ஊடகமான வால் ஸ்ரிட் ஜெர்னலில் செய்தி வெளியானது. அந்தக் கட்டுரையில், ‘இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், லவ் ஜிகாத் விவகாரம், இஸ்லாமியர்கள் உள்நோக்கத்துடன் கொரோனாவைப் பரப்பினார்கள் என்று பா.ஜ.க தலைவர்கள் பேசிய வீடியோக்கள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    அந்த கட்டுரை இந்திய அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ஃபேஸ்புக் விளக்கமளித்துள்ளது. அதனுடைய விளக்கத்தில், ‘வன்முறையைத் தூண்டும் வெறுப்பு பேச்சு மற்றும் வெறுப்பு கருத்துகளை நாங்கள் தடைசெய்கிறோம். எந்த கட்சிக்கோ அல்லது எந்த சித்தாந்தத்துக்கோ சாதகமாக இல்லாமல், இந்த நடைமுறையை நாங்கள் உலகளவில் பின்பற்றுகிறோம். நாங்கள் இன்னமும் நிறைய செய்யவேண்டியுள்ளது. வெளிப்படைத் தன்மையையும், துல்லியத்தன்மையையும் உறுதிப்படுத்தும் பணியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published: