அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதை தடுக்க இயலாது என்று தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
தேர்தலுக்கு முன் இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது.
அதில், தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தேர்தலுக்கு முன்னதாக இலவசங்களை அறிவித்து ஆட்சிக்கு வந்தவுடன் அதனை செயல்படுத்துவது என்பது அரசியல் கட்சிகள் மற்றும் மாநில அரசுகளின் கொள்கை முடிவு. அதில் தலையிட இயலாது. அது தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டது.
இதையும் படிங்க - மும்பையை யூனியன் பிரதேசமாக மாற்ற பாஜக சதி: சிவசேனா குற்றச்சாட்டு
இலவச அறிவிப்புக்களை ஏற்பதும், நிராகரிப்பதும் வாக்காளர்களின் முடிவுக்கு உட்பட்டது.
தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களை அறிவிப்பது குற்றமாகாது என்பதை 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.