நாட்டுக்காக எந்த சவால்களையும் சந்திக்க தயார் - முப்படைத் தளபதிகள்
எதிரிகள் முன்பு அமைதியுடனும் பணிவுடனும் இருப்பவனை கோழை என நினைத்து விடுவான் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி
- News18
- Last Updated: February 27, 2019, 2:17 PM IST
நாட்டுக்காக எந்த சவால்களையும் சந்திக்க தயார் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முப்படைத் தளபதிகள் தெரிவித்துள்ளனர். எதிரிகள் முன்பு அமைதியுடனும் பணிவுடனும் இருப்பவனை கோழை என எதிரி நினைத்து விடுவான் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
சற்று சத்தமில்லாமல் புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துள்ள இந்திய விமானப் படையின் பலம் நாடு முழுவதும் போற்றப்படுகிறது.
நேற்றிரவு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும், முப்படையின் தளபதிகள் சந்தித்து சந்தித்து பேசினர். பாகிஸ்தானின் எதிர் நடவடிக்கையை சமாளிப்பது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை பற்றி பிரதமரிடம் எடுத்துரைத்தனர். முப்படை தளபதிகளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, விமானப்படை தளபதி பிஎஸ் தானோவை பாராட்டினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடமும் முப்படை தளபதிகள் ஆலோசனையை மேற்கொண்டனர்.
இதற்கிடையே, பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் குறித்து பன்னாட்டு தூதர்களுக்கும் அனைத்து கட்சிகளுக்கும் இந்திய அரசு விளக்கி கூறியுள்ளது. டெல்லியில் உள்ள இங்கிலாந்து, கனடா, சீனா மற்றும் பாகிஸ்தான் தவிர்த்த அனைத்து ஆசிய நாடுகளின் தூதர்களுக்கும் வெளியுறவுத்துறை சார்பில் நேரில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதே போன்று டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
அதில், காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் பங்கேற்றனர். அவர்களிடம் அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தாக்குதல் குறித்த தகவல்கள் பகிர்ந்து கொண்டார். மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு அனைத்து கட்சியினரும் ஒருமித்த குரலில் ஆதரவு அளித்ததாகவும், இதே போல சர்வதேச நாடுகளும் ஆதரவு அளித்து உள்ளதாகவும் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
கூட்டம் முடிவுற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத், வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குள் வரும் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கான பாதுகாப்பு படையினரின் முயற்சிக்கு ஆதரவு அளிப்போம் என கூறினார்.
எதிரிகள் முன்பு அமைதியுடனும் பணிவுடனும் இருப்பவனை கோழை என எதிரி நினைத்து விடுவான் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராணுவத்தின் தகவல் தொடர்புக்கான கூடுதல் இயக்குநர் டிவிட்டரில் பதிவிட்டுள்ள கவிதையில், சமாதானம் என்பது நீ வலிமையானவனாகவும் வெல்லும் திறனுடையவானவும் இருந்தால் மட்டுமே சாத்தியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்தியா-பாகிஸ்தானின் தற்போதையை நிலையை கருத்தில் கொண்டு டெல்லிக்கு மாநில அந்துஸ்து கோரும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக ட்விட்டரில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிவிட்டார்.
Also see... துல்லிய தாக்குதல் நடத்திய மிராஜ் 2000 போர் விமானத்தின் சிறப்பு அம்சங்கள்
சற்று சத்தமில்லாமல் புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துள்ள இந்திய விமானப் படையின் பலம் நாடு முழுவதும் போற்றப்படுகிறது.
நேற்றிரவு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும், முப்படையின் தளபதிகள் சந்தித்து சந்தித்து பேசினர். பாகிஸ்தானின் எதிர் நடவடிக்கையை சமாளிப்பது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை பற்றி பிரதமரிடம் எடுத்துரைத்தனர்.
இதற்கிடையே, பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் குறித்து பன்னாட்டு தூதர்களுக்கும் அனைத்து கட்சிகளுக்கும் இந்திய அரசு விளக்கி கூறியுள்ளது. டெல்லியில் உள்ள இங்கிலாந்து, கனடா, சீனா மற்றும் பாகிஸ்தான் தவிர்த்த அனைத்து ஆசிய நாடுகளின் தூதர்களுக்கும் வெளியுறவுத்துறை சார்பில் நேரில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதே போன்று டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
EAM @SushmaSwaraj exposes Jaish-e-Mohammed’s role in spreading terrorism pic.twitter.com/uaQcJQfrwX
— Doordarshan News (@DDNewsLive) February 27, 2019
அதில், காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் பங்கேற்றனர். அவர்களிடம் அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தாக்குதல் குறித்த தகவல்கள் பகிர்ந்து கொண்டார். மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு அனைத்து கட்சியினரும் ஒருமித்த குரலில் ஆதரவு அளித்ததாகவும், இதே போல சர்வதேச நாடுகளும் ஆதரவு அளித்து உள்ளதாகவும் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
கூட்டம் முடிவுற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத், வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குள் வரும் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கான பாதுகாப்பு படையினரின் முயற்சிக்கு ஆதரவு அளிப்போம் என கூறினார்.
எதிரிகள் முன்பு அமைதியுடனும் பணிவுடனும் இருப்பவனை கோழை என எதிரி நினைத்து விடுவான் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராணுவத்தின் தகவல் தொடர்புக்கான கூடுதல் இயக்குநர் டிவிட்டரில் பதிவிட்டுள்ள கவிதையில், சமாதானம் என்பது நீ வலிமையானவனாகவும் வெல்லும் திறனுடையவானவும் இருந்தால் மட்டுமே சாத்தியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
आज सिन्धु ने विष उगला है,
लहरों का यौवन मचला है।
आज ह्रदय में और सिन्धु में, साथ उठा है ज्वार,
तूफानों की ओर घुमा दो, नाविक निज पतवार।#NationFirst#IndianArmedForces @IAF_MCC @indiannavy pic.twitter.com/MxShj9VPLr
— ADG PI - INDIAN ARMY (@adgpi) February 26, 2019
In view of prevailing Indo Pak situation, I am postponing my upwas for full statehood of Delhi. We all stand as one nation today.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 26, 2019