கடல் வழியாக வந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும் இந்திய கடற்படைக்கு போதுமான அளவு நிதி ஒதுக்கப்படுவதில்லை எனவும் கடற்படைத் தளபதி கரம்பீர்சிங் தெரிவித்துள்ளார்.
புனேவில் நடைபெற்ற இந்திய கடற்சார் பாதுகாப்பு கருத்தரங்கத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த கரம்பீர் சிங், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பினர் நீர்வழி தாக்குதலில் ஈடுபட பயிற்சி எடுப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது என்றார்.
நீர்வழி தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் இப்போது தான் பயிற்சி பெறுவதாகவும், உளவுத்துறை தகவலை அடுத்து கடற்படை முழு அளவில் எச்சரிக்கையாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்திய கடற்படைக்கு ஒதுக்கும் நிதி குறைந்து வருவதாகக் குறிப்பிட்ட கரம்பீர் சிங், 2012-13 ஆம் ஆண்டில் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தின் 18 சதவீதத்திலிருந்து தற்போது 13 சதவீதமாகக் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
நிதி குறைப்பு கடற்படையின் திறன் மேம்பாட்டை பாதிக்கும் என்றும் கரம்பீர் சிங் தெரிவித்தார். நட்பு நாடுகளுக்கு உதவிகள் வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்படும் நிலையில் அவற்றை காப்பாற்ற போதுமான, தனி நிதியம் ஒதுக்குவது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் பார்க்க... பிறந்தநாள் கொண்டாடத்தில் வெடித்த குண்டு
Published by:Vaijayanthi S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.