• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கொரோனா: நாங்கள் பொறுப்பல்ல, உங்கள் ரிஸ்க்தான்: பெற்றோர்களிடம் கைவிரிக்கும் பள்ளிகள்

கொரோனா: நாங்கள் பொறுப்பல்ல, உங்கள் ரிஸ்க்தான்: பெற்றோர்களிடம் கைவிரிக்கும் பள்ளிகள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு தெளிவும் இல்லை, மேலும் திடீரென பள்ளிகளைத் திறப்பதும் தெலுங்கானாவில் பெற்றோர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதோடு, பள்ளிகள் நிர்வாகமும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது உங்கள் ரிஸ்க்தான் நாங்கள் பொறுப்பல்ல என்று கைவிரிக்கும் சூழல் நிலவி வருகிறது.

  • Share this:
    பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு தெளிவும் இல்லை, மேலும் திடீரென பள்ளிகளைத் திறப்பதும் தெலுங்கானாவில் பெற்றோர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதோடு, பள்ளிகள் நிர்வாகமும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது உங்கள் ரிஸ்க்தான் நாங்கள் பொறுப்பல்ல என்று கைவிரிக்கும் சூழல் நிலவி வருகிறது.

    கிண்டர் கார்டன் பள்ளிகள் முதல் பிஜி வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் செப்டம்பர் 1 முதல் திறக்கலாம் என்று தெலுங்கானா அரசு கடந்த வாரம் அறிவித்தது.

    ஆனால் சில பள்ளிகள் பெற்றோரிடமிருந்து ஒப்புதல் கடிதம் கோருகையில் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புவது பெற்றோர்களின் சுயவிருப்பம் சார்ந்ததன் அடிப்படையில் தங்கள் சொந்த ரிஸ்க்கில் தான் அனுப்புகிறோம் என்றும் கல்வி நிலைய நிர்வாகம் பொறுப்பல்ல என்றும் எழுதி உறுதிப் பத்திரம் வாங்கிக் கொள்கின்றன. அதாவது கொரோனா உள்ளிட்ட மருத்துவ சிக்கல் ஏற்பட்டால் அதற்கு பள்ளி பொறுப்பல்ல, பெற்றோர் ரிஸ்க்தான் என்று கூறி வருகின்றன பள்ளி நிர்வாகங்கள்.

    டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்செலன்ஸ் என்ற பள்ளிக்கு நகரம் முழுதும் கிளைகள் உள்ளன. அந்தப் பள்ளி, “பெற்றோர் தங்கள் குழந்தைகளை தங்கள் சொந்த ரிஸ்கில்தான் அனுப்புகிறார்கள் என்றும் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல” என்றும் உறுதிப் பத்திரத்தை கையெழுத்திட்டு வாங்கிய பிறகே அனுமதிக்கின்றனர்.

    இதனையடுத்து ஹைதராபாத்தில் உள்ள ஹைதராபாத் பள்ளிக்குழந்தைகள் பெற்றோர் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. “குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியம் என்கிறோம் ஆனால் ஒப்புதல் படிவத்தில் இந்தப் பள்ளிகள் பயன்படுத்தும் மொழி அச்சமூட்டுவதாக உள்ளது. குழந்தைகளின் ஆரோக்கிய விவகாரத்தில் பள்ளிகள் தங்கள் பொறுப்புகளை உதறுகின்றன. இதில் எப்படி பெற்றோர் கையெழுத்திடுவார்கள்” என்று கேட்கின்றனர், பெற்றோர் சங்கத்தினர்.

    மேலும் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் அரசு வெளியிட்டுள்ள பள்ளிகள் திறப்பு உத்தரவிலும் எந்த ஒரு தெளிவும் இல்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

    இதனால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விரும்பவில்லை என்பதே சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளது. பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் குறைந்தது ஒரு டோஸ் வாக்சின் எடுத்துக் கொள்வது உறுதி செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இன்று தெலுங்கானா ஹை கோர்ட் இது தொடர்பான வழக்கை விசாரிக்கவிருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: