பீகார் தேர்தல்: 'காங்கிரஸை பயனுள்ள மாற்றாக கருதவில்லை' - கபில் சிபல் கருத்தால் பரபரப்பு

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல்.

காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே மாற்றங்களைச் செய்ய வேண்டிய நேரம் இது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார்.

 • Share this:
  பீகார் தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து, நாட்டின் பயனுள்ள மாற்று சக்தியாக காங்கிரஸ் திகழவில்லை என்று மக்கள் கருதுவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் கருத்து தெரிவித்துள்ளார். தனியார் நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள அவர், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே மாற்றங்களைச் செய்ய வேண்டிய நேரம் இது என்றும் அவர் கூறியுள்ளார்.

  உத்தரபிரதேசம், குஜராத் மாநில இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியினர் சரியாக பணியாற்றவில்லை என்று அவர் சாடினார். பிரச்னைகளுக்குத் தீர்வுகள் தெரிந்தும் காங்கிரஸ் கட்சியில் உள்ளோர் அதனைச் செய்வதில்லை என்றும் கபில் சிபல் விமர்சித்துள்ளார்.

  Also read: தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தடை செய்யப்பட வேண்டும் - ராமதாஸ்

  ”நாங்கள் அங்கே (குஜராத் இடைத்தேர்தலில்) ஒரு சீட்டுகூட வெற்றிபெறவில்லை. நாடாளுமன்றத் தேர்தலின்போதும் இதே நிலைமைதான். உத்தரப் பிரதேசத்தில் உள்ள சில தொகுதிகளின் இடைத்தேர்தலில் 2 சதவிதத்திற்கும் குறைவான வாக்குகளையே காங்கிரஸ் வேட்பாளர்கள் பெற்றார்கள்” என்று கூறிய கபில் சிபல், காங்கிரஸ் தன்னை சுயவிசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.  தன் கருத்தை வெளிப்படுத்த கட்சிக்குள் உரிய இடமில்லாததால் அதைப் பொதுவில் வெளிப்படுத்துவதாகக் கூறிய அவர், நான் காங்கிரஸ்காரனாகவே இருக்கிறேன். அப்படியே இருப்பேன். இதுவரை இந்த தேசம் இருந்துவந்த விழுமியங்களிலிருந்து தடம்புரண்டுள்ளது. காங்கிரஸ் மாற்று வழங்கும் என்று நம்புகிறேன், பிரார்த்திக்கிறேன் என்று கூறினார்.
  Published by:Rizwan
  First published: