Home /News /national /

West Bengal Election Result | பிரசாந்த் கிஷோர் சபதம் நிறைவேறுகிறதா? மேற்கு வங்கத்தில் பாஜக-வுக்கு பின்னடைவு: திரிணாமூல் ராஜநடை

West Bengal Election Result | பிரசாந்த் கிஷோர் சபதம் நிறைவேறுகிறதா? மேற்கு வங்கத்தில் பாஜக-வுக்கு பின்னடைவு: திரிணாமூல் ராஜநடை

பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர்

“பாஜகவை தூக்கிப் பிடிக்கும் மீடியாக்கள் கொடுக்கும் ஊதிப்பெருக்கல் செய்திகள் ஒருபுறம் ஆனால் பாஜக மேற்கு வங்கத்தில் இரட்டை இலக்க இடங்களைக் கடக்கவே போராட வேண்டியிருக்கும். என் இந்த ட்வீட்டை மறக்காமல் சேமித்து வையுங்கள், பாஜக இதைத்தாண்டி வென்றால் நான் என் தொழிலையே விட்டு விடுகிறேன்” என்று பேசியிருந்தார்.

மேலும் படிக்கவும் ...
    மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இரட்டை இலக்க இடங்களைத் தாண்டினால் என் தொழிலையே விட்டு விடுகிறேன் என்றார் பிரசாந்த் கிஷோர். முதலில் நல்ல முன்னேற்றம் காட்டிய பாஜக தற்போது தேங்கிப்போக திரிணாமூல் ராஜநடை போட்டு வருகிறது.

    சமீபத்திய நிலவரங்களின்படி திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணி 204 இடங்களில் முன்னிலை பெற 100 தொகுதிகளுக்கும் மேல் முன்னிலையிலிருந்த பாஜக 85 தொகுதிகளில் மட்டுமே தற்போது முன்னிலை வகித்து வருகிறது. இடது சாரி, காங்கிரஸ் இருக்கும் இடம் தெரியாமல் போனது.

    தேர்தலுக்கு முன்பாக 200 இடங்கள் எடுப்போம், அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைப்போம் என்று பாஜக தலைவர்கள் வீரவசனம் பேசிய போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் பாஜக மேற்கு வங்கத்தில் 100 இடங்களைப் பிடித்தால் தான் தன் தொழிலையே விட்டு விடுகிறேன் என்றார், இப்போது அவர் சொன்னது போலவே பாஜக இரட்டை இலக்கத்தைத் தாண்டாது என்ற நிலை உருவாகியுள்ளது.

    அசாமில் எதிர்பார்த்தது போலவே பாஜக 79 தொகுதிகளில் முன்னிலை பெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் நிலை உள்ளது. காங்கிரஸ் இங்கு 47 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

    “பாஜகவை தூக்கிப் பிடிக்கும் மீடியாக்கள் கொடுக்கும் ஊதிப்பெருக்கல் செய்திகள் ஒருபுறம் ஆனால் பாஜக மேற்கு வங்கத்தில் இரட்டை இலக்க இடங்களைக் கடக்கவே போராட வேண்டியிருக்கும். என் இந்த ட்வீட்டை மறக்காமல் சேமித்து வையுங்கள், பாஜக இதைத்தாண்டி வென்றால் நான் என் தொழிலையே விட்டு விடுகிறேன்” என்று பேசியிருந்தார்.

    அப்போது நெட்டிசன்கள் ‘இதுதான் பிரசாந்த் கிஷோர் நீங்கள் தொழிலை விட வேண்டிய சரியான நேரம்” என்றும் பலவிதமாக அவரைக் கேலி செய்தனர். ஆனால் இன்று பாஜக ஆரம்பத்தில் எழுச்சி பெற்று பிறகு மெதுவே மந்தமடைந்து 84 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. திரிணாமூல் ராஜநடை வெற்றியில் 205 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

    இன்று பிரசாந்த் கிஷோர் ட்வீட்டை நெட்டிசன்கள் நினைவுகூர்வார்களா என்று பார்க்க வேணடும், நந்திகிராம் ஹாட் தொகுதியில் முதலில் சுவேந்து அதிகாரி 4 ஆயிரத்து சொச்ச ஓட்டுகளில் முன்னிலை வகித்தார், ஆனால் கடைசியாக கிடைத்த தகவல்களின் படி மம்தா அவரைக் கடந்து சென்று ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    ஆனால் பாஜகவுக்கு இது முக்கியமான ஒரு பிரேக்த்ரூதான், திரிணாமூலுக்கு விடும் எச்சரிக்கைதான் என்று பாஜக வட்டாரங்கள் மனம் தளராமல் பேசி வருகின்றனர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: BJP, Election Result, Prashant Kishor, West Bengal Assembly Election 2021

    அடுத்த செய்தி