யானைகள்; ஊட்டச்சத்துக் குறைபாடு - வயநாடு தொகுதியின் பிரதான பிரச்னைகள் என்ன?

தற்போது அவர்கள் அவர்களது சொந்தநிலத்திலேயே அகதிகளாக பார்க்கப்படுகின்றனர். இந்தப் பகுதிகளில் வாழும் பழங்குடிகளிடம் ஊட்டச்சத்தின்மை குறைபாடு நிலவுகிறது.

news18
Updated: April 4, 2019, 5:46 PM IST
யானைகள்; ஊட்டச்சத்துக் குறைபாடு - வயநாடு தொகுதியின் பிரதான பிரச்னைகள் என்ன?
தற்போது அவர்கள் அவர்களது சொந்தநிலத்திலேயே அகதிகளாக பார்க்கப்படுகின்றனர். இந்தப் பகுதிகளில் வாழும் பழங்குடிகளிடம் ஊட்டச்சத்தின்மை குறைபாடு நிலவுகிறது.
news18
Updated: April 4, 2019, 5:46 PM IST
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதி, இந்திய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. வயநாடு தொகுதியின் பிரதான மக்களான பழங்குடிகளின் வாழ்வாதரப் பிரச்னைகள் முக்கிய பிரச்னைகளாக இருக்கின்றன. 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதி, 18 சதவிதம் பழங்குடியின மக்கள் வாழும் பகுதி. இந்த மக்களவைத் தொகுதிக்குள் வரும் சுல்தான் பத்தேரி மற்றும் மனான்தாவாடி சட்டமன்றத் தொகுதிகள் தனித் தொகுதிகளாக அறிவிக்கப்பட்டவை.

வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்திக்கு, பழங்குடியின மக்களின் நன்மதிப்பை பெற வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால், அந்த மக்கள் தற்போது அரசியல் கட்சிகளைத் தாண்டி, அரசுகளின் மீது பெரும் அதிருப்தி நிலவுகிறது.

தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்ற ராகுல் காந்தி


இதுகுறித்து தெரிவித்த பழக்குடி ஒருவர், ‘நாங்கள் தங்குவதற்கு ஏற்ற வசிப்பிடங்கள் இல்லை. எங்கள் பகுதிகளுக்கு சாலை வசதி இல்லை. குடிநீர் வசதி இல்லை. எங்களுக்கு அரசியல்வாதிகளின் மீது நம்பிக்கை இல்லை’ என்று தெரிவித்தார்.

தொகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்து தெரிவித்த பழங்குடியினப் பெண் ஒருவர், ‘எங்கள் வீடுகளை யானைகள் தாக்கும் பிரச்னையை எதிர்கொள்கிறோம். இந்தமுறை, நாங்கள் தேர்தலில் ஓட்டு போட போவதில்லை. தேர்தல்களில் பங்கேற்பதால் எந்தப் பலனும் இல்லை’ என்று தெரிவித்தார்.

இந்தப் பகுதிகள் நூற்றாண்டு காலமாக பழங்குடிகளின் வாழிடமாக இருந்துவருகிறது. இங்கு, பனியா, குருமா, அடியார்ஸ், குறிச்சயா, காட்டுநாயக்கன் ஆகிய இனத்தைச் சேர்ந்த பழங்குடிகள் வசித்துவருகின்றனர்.
Loading...
வயநாடு சூழல் குறித்து தெரிவித்த பழங்குடிகள் நலனுக்காக பல ஆண்டுகளாக செயல்பட்டுவரும் செயற்பாட்டாளர் ஜித்தேந்திரநாத், ‘வயநாடு பகுதி பாரம்பரியாக பழங்குடிகளின் வாழிடமாக இருந்துவருகிறது. அவர்கள், தங்களது பெயரில் நிலத்தை வைத்திருக்கவேண்டும் என்று விரும்பியது இல்லை.



ஆனால், தற்போது அவர்கள் அவர்களது சொந்த நிலத்திலேயே அகதிகளாக பார்க்கப்படுகின்றனர். இந்தப் பகுதிகளில் வாழும் பழங்குடிகளிடம் ஊட்டச்சத்தின்மை குறைபாடு நிலவுகிறது. இந்தப் பழங்குடி மக்களின் முக்கிய உணவாக இறைச்சி மற்றும் பழங்கள் இருந்துவந்தது.

ஆனால், அரசுகள் பல்வேறு திட்டங்களின் மூலம் பால் பவுடர் மற்றும் அரசியை அவர்களது உணவாக பழக்கியது. அந்த மக்களின் உணவுமுறையை கட்டாயப்படுத்தி மாற்றியதால் அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது. வெறும் பால்பவுடர், அரிசி போன்ற உணவால் அந்த மக்களால் வாழ முடியாது.

வயநாடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், அந்த மக்களைப் பற்றி புரிந்து கொள்ளவேண்டும். அவர்களது உணவுமுறை, வட்டார மொழியைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களை வெறும் வாக்கு வங்கியாகப் பார்க்கவேண்டும்’ என்று தெரிவித்தார். வயநாடு தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக, சி.பி.எம்மின் சார்லில் பி.பி.சுனிர் போட்டியிடுகிறார்.

ஐ.பி.எல் விவரங்கள்:







Also see:

First published: April 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626