Home /News /national /

பில் கட்டாததால் 3 ஆண்டுகளாக தண்ணீர் விநியோகம் கட் - புகழ்பெற்ற அஜந்தா குகைக்கு நேர்ந்த அவலம்

பில் கட்டாததால் 3 ஆண்டுகளாக தண்ணீர் விநியோகம் கட் - புகழ்பெற்ற அஜந்தா குகைக்கு நேர்ந்த அவலம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் முன்னணி சுற்றுலாத் தலமான அஜந்தா குகைகளுக்கு நிலுவைத் தொகை செலுத்தாதன் காரணமாக மூன்று ஆண்டுகளாக தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

முன்னணி சுற்றுலாத் தலமான அஜந்தா குகைகளுக்கு நிலுவைத் தொகை செலுத்தாதன் காரணமாக மூன்று ஆண்டுகளாக தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

உலகப் புகழ் பெற்ற அஜந்தா குகைகள் மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் உள்ளன. பழம்பெரும் குகை சிற்பங்கள், பாறை ஓவியங்கள் உள்ள பல்வேறு கலை அம்சங்கள் நிறைந்த அஜந்தா குகைள் யுனெஸ்கோ(UNESCO) நினைவு சின்னங்களில் ஒன்றாகும். இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின்(ASI ) கட்டுப்பாட்டில் இது பராமரிக்கப்பட்டுவருகிறது.

உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இந்த அஜந்தா குகைக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

தண்ணீர் பில் கட்டாத காரணமாக இங்கு 2019ஆம் ஆண்டிலிருந்து தண்ணீர் சப்பளை இல்லை என்று நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக அங்கு பூங்கா பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் சுணக்கம் கண்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் மாநிலத்தின் சுற்றுலா அமைச்சர் ஆதித்யா தாக்கரே அஜந்தா குகைகளை நேரில் கண்டு பார்வையிட்டார். அவரிடம் இது கூறப்பட்டதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இன்று வரை இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை என நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

3 ஆண்டுகளுக்கு பிறகு மகனை பார்த்த தந்தையின் ரியாக்‌ஷன் - வைரல் வீடியோ

அஜந்தா குகைகளுக்கு மகாராஷ்டிரா ஜீவன் பிரதிகாரன் என்ற அமைப்பு நீர் வழங்கிவருகிறது. இந்த அமைப்புக்கு மகாராஷ்டிரா சுற்றுலாத் துறை ரூ.3.2 கோடி கட்டணத்தை பாக்கி வைத்துள்ளதாக ASI அலுவலர் மிலன் குமார் தெரிவித்துள்ளார். சுற்றுலாப் பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் குடிநீர் வழங்க ஆர்ஓ வசதி செய்து பயன்படுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

அதேவேளை, இந்த நீர் விநியோக பிரச்னை குறித்து அமைச்சர் ஆதித்யா தாக்ரே கவனத்திற்கு எடுத்து சென்ற போதும் இதுவரை பலன் கிடைக்கவில்லை என அவர் கூறினார்.
Published by:Karthick S
First published:

அடுத்த செய்தி