முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு
முல்லைப்பெரியாறு அணை
  • News18
  • Last Updated: August 16, 2018, 4:22 PM IST
  • Share this:
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் 4,489 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த ஒரு வார காலமாக பெய்துவரும் மழையால், 10 மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. மழை சற்று ஓய்ந்த நிலையில், நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று மீண்டும் மழை பெய்தது.

இதனால், வீடுகளுக்கு திரும்பியிருந்த மக்கள் மீண்டும் தற்காலிக முகாம்களுக்கு சென்றுள்ளனர்.இந்நிலையில்,  தொடர் மழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் அணைக்கான நீர்வரத்து 23, 200 கனஅடியாக அதிகரித்துள்ளது.


இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்றிரவு 140 அடியை எட்டியது.  இதைத் தொடர்ந்து கரையோர மக்களின் பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து நள்ளிரவு 2.30 மணிக்கு, மொத்தமுள்ள 13 மதகுகள் வழியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டது.

அணையிலிருந்து, முதற்கட்டமாக விநாடிக்கு 4,489 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதையடுத்து, கரையோரங்களில் வசித்து வரும் 1,250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில், அங்கு நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
First published: August 15, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading