முகப்பு /செய்தி /இந்தியா / “காந்தாரா திரைப்படத்தை பார்த்தேன்.. அருமையான கலாச்சாரத்தை அறிந்தேன்..” - அனுபவத்தை பகிர்ந்த அமித்ஷா..!

“காந்தாரா திரைப்படத்தை பார்த்தேன்.. அருமையான கலாச்சாரத்தை அறிந்தேன்..” - அனுபவத்தை பகிர்ந்த அமித்ஷா..!

காந்தாரா படம் பார்த்த அமித்ஷா

காந்தாரா படம் பார்த்த அமித்ஷா

கர்நாடகாவில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அமித் ஷா காந்தாரா திரைப்படம் பார்த்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடக மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.

இந்நிலையில், அம்மாநிலத்தின் தக்ஷின கன்னடாவில் உள்ள புத்தூர் தாலுகாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில்  நேற்று அமித்ஷா கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த 1,700 பேரை காங்கிரஸ் அரசு விடுதலை செய்யததாக கூறினார். ஆனால், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பையே பாஜக தடை செய்ததாக அமித்ஷா தெரிவித்தார்.

பாஜகவால் மட்டுமே கர்நாடகாவிற்கு பாதுகாப்பு வழங்க முடியும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர், நான் தற்போது தான் காந்தாரா படத்தை பார்த்துவிட்டு வருகிறேன். தக்ஷின கணடாவின் வளம் மிக்க கலாச்சாரத்தை இந்த படத்தின் மூலம் நான் அறிந்துகொண்டேன். மிகவும் சவாலான சூழலில் கூட விவசாயத்தை விடாமல் தொடர்ந்து செய்யும் ஒரு சில பகுதிகளில் தக்ஷின கனடாவும் ஒன்று எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 2022-ல் குடியுரிமையை துறந்த 2.25 லட்சம் இந்தியர்கள் - அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

இயக்குனர் ரிஷப் ஷெட்டியின் உருவாக்கத்தில் கடந்தாண்டு வெளியான காந்தாரா திரைப்படம் கர்நாடகாவில் மட்டுமல்லாது நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் அடுத்த பாகமான காந்தாரா 2 -இன் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இரண்டாம் பாகம் 2024இல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Amit Shah, Home Minister Amit shah, Karnataka