Home /News /national /

யாத்திரையின்போது சிறுமிக்கு செருப்பு அணிவித்து உதவிய ராகுல் காந்தி... நெட்டிசன்கள் நெகிழ்ச்சி!

யாத்திரையின்போது சிறுமிக்கு செருப்பு அணிவித்து உதவிய ராகுல் காந்தி... நெட்டிசன்கள் நெகிழ்ச்சி!

குழந்தைக்கு செருப்பு அணிவித்த ராகுல் காந்தி

குழந்தைக்கு செருப்பு அணிவித்த ராகுல் காந்தி

Rahul Gandhi: பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி சிறுமிக்கு செருப்பு அணிவித்து உதவிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India
    காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி தரும் விதமாக ராகுல் காந்தி “பாரத் ஜோடோ யாத்ரா” என அழைக்கப்படும் இந்திய ஒற்றுமை பயணத்தை செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். இந்த பாத யாத்திரையானது மொத்தம் 3,500 கிலோ மீட்டர் தூரம் 150 நாட்கள் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் 4 நாள்கள் 59 கிலோ மீட்டர் தூரம் யாத்திரை மேற்கொண்ட நிலையில், தற்போது அவர் கேரளாவில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

    11ஆம் நாளான இன்றை யாத்திரையை ஹரிபாத்தில் தொடங்கினார் ராகுல் காந்தி. இந்த யாத்திரையில் கட்சியின் மூத்த தலைவர்களான ரமேஷ் சென்னிதலா, முரளிதரன், கே சி வேணுகோபால் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது சாலையில் தொண்டர்களுடன் ராகுல் காந்தி நடந்து வந்தபோது அருகே சிறுமி ஒருவரும் யாத்திரையில் பங்கேற்று நடந்தார். அந்த சிறுமி முறையாக தனது செருப்பை அணியாததால் தடுமாறி நடந்ததை ராகுல் காந்தி கவனித்த நிலையில், சட்டென்று நடப்பதை ராகுல் நிறுத்திக்கொண்டார்.

    இதையும் படிங்க: வங்கிக் கணக்கில் தவறுதலாக கிரெடிட் ஆன ரூ.11,677 கோடி.. சமார்த்தியமாக லாபம் பார்த்த முதலீட்டாளர்

    சிறுமி அருகே சென்று, கீழே குனிந்து சிறுமியின் பாதங்களில் செருப்பை சரியாக மாட்டிவிட்டார் ராகுல் காந்தி. பின்னர், இயல்பாக சிறுமியுடன் நடக்க ஆரம்பித்தார். ராகுல் காந்தியின் இந்த பண்பு அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.


    அத்துடன் இந்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ராகுல் காந்தி எளிமை மற்றும் அன்பு பொருந்திய தலைவர் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துவதாக காங்கிரஸ் கட்சியினர் கூறி வருவதோடு இந்த காணொளியையும் பகிர்ந்து வருகின்றனர். அடுத்த நாள்களில் கேரளாவின் எர்ணாகுளம், திரிசூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய பகுதிகளில் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொள்ளவுள்ளனர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Rahul gandhi, Viral Video

    அடுத்த செய்தி