ஊருக்குள் புகுந்து நாயை வேட்டையாடி சென்ற கருஞ்சிறுத்தை... பீதியில் உறைந்த மக்கள்!

ஊருக்குள் புகுந்து நாயை வேட்டையாடி சென்ற கருஞ்சிறுத்தை... பீதியில் உறைந்த மக்கள்!

நாயை வேட்டையாடிக் சென்ற கருஞ்சிறுத்தை

கருஞ்சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதியில் இருந்த தெருநாய் ஒன்றை வேட்டையாடி சென்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
சமீபத்தில் கர்நாடகாவின் கபினி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கருஞ்சிறுத்தை ஒன்று உலாவிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில், இந்திய வன சேவை (IFS) அதிகாரி ஒருவர் பகிர்ந்த புதிய வீடியோ மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், கருஞ்சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதியில் இருந்த தெருநாய் ஒன்றை வேட்டையாடி சென்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுமார் 1 நிமிடம் 15 வினாடிகளை கொண்ட அந்த வீடியோ கிளிப்பில், ஒரு மலைப்பாங்கான பகுதிக்கு அருகில் கரடுமுரடாக அமைந்திருந்த ஒரு பாதை வழியாக வேட்டையாடும் பிளாக் பாந்தர் இரையை தேடி மெதுவாக நடந்து வருவதை காணலாம். சில நிமிடங்கள் கழித்து சிறுத்தை குடியிருப்பு பாதையில் மேலும் நகர்ந்து செல்வதைக் காணலாம். பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை தாண்டி கருஞ்சிறுத்தை சென்றதால் அது என்ன செய்தது என்பதை யூகிக்க முடியவில்லை. இருப்பினும், சில நொடிகளிலேயே ஒரு நாயின் அலறல் சத்தம் மட்டும் கேட்டது.

இதன்மூலம், சிறுத்தை தனக்கான இரையை கண்டுபிடித்துவிட்டது என்று யூகிப்பதற்குள், வேட்டையாடிய நாயை வாயில் கவ்விக்கொண்டு கரடுமுரடான பாதையை நோக்கிக் கருஞ்சிறுத்தை வேகமாக ஓடியது. கருஞ்சிறுத்தை நாயை கவ்விக்கொண்டு சென்ற காட்சிகள் மட்டும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் இந்த வீடியோ கிளிப்பை வெளியிட்ட ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுதா ராமன், சம்பவம் நடந்த இடம் குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. இருப்பினும் அந்த விலங்கு ஒரு ‘விளிம்பு வாழ்விடத்திற்கு’ அதாவது மலைக்கிராமத்திற்கு விஜயம் செய்ததாகவும், நாய்கள் அவற்றிற்கு பிடித்த இரையாக இருப்பதாகவும் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. மேலும் பலர் பல்வேறு கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், இந்த கருஞ்சிறுத்தை எனக்கு வேண்டும். ஏனென்றால் எனது பகுதியில் அதிகளவில் தெருநாய்கள் தொல்லை இருக்கிறது என்று நகைச்சுவையாக ட்வீட் செய்துள்ளார்.

Also read... பாட்னாவில் ஜூம் மீட்டிங்கின்போது மதிய உணவை சாப்பிட்ட வக்கீல் - வைரலாகும் வீடியோ!

சமீப காலமாக குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தைகள், கருஞ்சிறுத்தைகள், புலிகள் நடமாட்டம் அதகிகரித்து வருவது மிகச்சாதாரணமாகியுள்ளது. இதேபோல, கர்நாடகாவில் கடந்த மாதம் ஒரு தெரு நாய் சிறுத்தையுடன் கழிவறையில் சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அனைவருக்கும் நினைவில் இருக்கலாம். சுமார் 7 மணி நேரம் இரு விலங்குகளும் அந்த கழிவறையில் இருந்ததாகவும், அந்த சமயத்தில் நாயை சிறுத்தை ஒன்றுமே செய்யாமல் இருந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வந்தன. இந்த சம்பவம் தட்சிணா கன்னட மாவட்டத்தின் கடபாவில் உள்ள பிலினேல் கிராமத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: