ஹோம் /நியூஸ் /இந்தியா /

'போர்க்களத்தில் பூத்த காதல்' உக்ரைன் ராணுவ வீரரின் க்யூட் ப்ரோபோசல் வீடியோ வைரல்

'போர்க்களத்தில் பூத்த காதல்' உக்ரைன் ராணுவ வீரரின் க்யூட் ப்ரோபோசல் வீடியோ வைரல்

உக்ரைன் காதலர்கள் க்யூட் ப்ரோபோசல்

உக்ரைன் காதலர்கள் க்யூட் ப்ரோபோசல்

போரில் கால் ஒன்றை இழந்த ராணுவ வீரர் தனது காதலிக்கு மண்டியிட்டு ப்ரோபோஸ் செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • inter, IndiaKyivKyiv

  போர்க்களத்திலும் அன்பு எனும் பூக்கள் பூக்கும் என்ற கவித்துவமான வரிகளை உண்மையாக்கும் விதமான நெகிழ்ச்சி சம்பவம் உக்ரைன் நாட்டில் நடைபெற்றுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகளின் போர் தாக்குதல் நடத்தி ஆக்கிரமிப்பைத் தொடங்கின.

  தனது எல்லையை காக்க உக்ரைன் ராணுவமும் மக்களும் சுமார் ஏழு மாதங்களுக்கு மேலாக போராடி வருகின்றன. போரில் காயங்களும் வேதனைகளையும் தாங்கி மக்கள் அவதியுறும் வேளையில், பார்ப்போர் மனதை அள்ளிச்செல்லும் விதமாக போர்க்களத்திலிருந்து வந்த வீரர் ஒருவர் க்யூட்டாக தனது காதலிக்கு ப்ரோபோசல் செய்துள்ளார். இந்த வீடியோவும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  wedworldmagazine என்ற இன்ஸ்டா பக்கத்தில் செப்டம்பர் 24ஆம் தேதி போஸ்ட் செய்த இந்த க்யூட் ப்ரோபோசல் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. உக்ரைனின் பிரபல வீடியோ கிரியேட்டரான 'டோப்ரிகா புரோடக்ஷன்' இந்த வீடியோவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
   
  View this post on Instagram

   

  A post shared by WedWorld Magazine (@wedworldmagazine)  இந்த காணொளியில் பெண்ணின் கண்களை கட்டி அவரது நண்பர்கள் ஆற்றங்கரை ஒன்றில் அமர வைத்துள்ளனர். போரில் தனது கால் ஒன்றை வீரர் நண்பரின் துணையுடன் பெண்ணின் முன் மண்டியிட்டு ப்ரோபோஸ் செய்கிறார். அப்போது பெண் தனது கண்களை கட்டியிருந்த துணியை அவிழ்த்து அவரின் ப்ரோபோசலை ஏற்கிறார். அருகே உள்ள நண்பர்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்து கொண்டாடுகின்றனர். உலகிலேயே தலை சிறந்த ப்ரோபோசல் காட்சி இது தான் என இந்த வீடியோவை பார்த்து ரசித்த நபர்கள் கமெண்டுகளை பதிவு செய்துவருகின்றனர்.

  இதையும் படிங்க: உக்ரைன் போரை தீர்த்துவைக்க எலான் மஸ்க் போட்ட ட்வீட்.. ஆத்திரத்தில் உக்ரைன் மக்கள்!

  இந்த வீடியோவை இதுவரை 2 கோடிக்கு மேல் பார்த்த நிலையில், 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். நாடுகளுக்கு தான் எல்லை அளவுகள் எல்லாம் உண்டு, ஆனால் போர்க்களத்திலும் அளவிட முடியாத அன்பும் காதலும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும் என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Instagram, Love proposal, Russia - Ukraine, Viral Video