• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Good News: போலீஸ் கொடுத்த அவசர சிகிச்சையால் உயிர் பிழைத்த இளைஞர் - வீடியோ

Good News: போலீஸ் கொடுத்த அவசர சிகிச்சையால் உயிர் பிழைத்த இளைஞர் - வீடியோ

மாதிரி படம்

மாதிரி படம்

கலீல் கொடுத்த சிபிஆர் சிகிச்சை வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

  • Share this:
    தெலங்கானாவில் இளைஞர் ஒருவர் சாலை விபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு இதயம் துடிப்பு நின்ற நிலையில் அங்கு வந்த காவலர் கொடுத்த சிபிஆர் சிகிச்சையால் அவர் உயிர்பிழைத்தார்.

    தெலங்கானாவின் கரீம் நகரில் போலீஸ் கான்ஸ்டபிளாக எம்.ஏ.கலீல் பணியாற்றி வருகிறார். கடந்த செவ்வாய் கிழமை இருசக்கர வாகனத்தில் வந்த அப்துல் கான் என்பவர் சாலை விபத்தில் சிக்கியதால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவரது இதயதுடிப்பும் நின்றுள்ளது.

    இந்நிலையில் அங்கு வந்த கான்ஸ்டபிள் கலீல் அவருக்கு உடனடியாக சிபிஆர் சிகிச்சை எனும் நெஞ்சை தன் கைகளால் அழுத்தி, அவரது இதய துடிப்பை மீண்டும் இயங்க செய்துள்ளார். காவலர் கலீல் கொடுத்த உடனடி முதலுதவி சிகிச்சையால் 21 வயதான அப்துல் கான் உயிர்பிழைத்தார்.

    Also Read : ஆசியாவிலேயே முதல் முறையாக ஸ்னிஃபர் நாய்களுக்காக கல்லறை அமைத்த கேரள போலீஸ்!

    கலீல் கொடுத்த சிபிஆர் சிகிச்சை வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உடனடியாக சிகி்ச்சை கொடுத்து உயிர்பிழைக்க வைத்த போலீஸ்க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தெலங்கானா டிஎஸ்பி தனது ட்விட்டர் பக்கத்தில் அவரை பாராட்டி உள்ளார்.



    அதில், அன்புள்ள கலீல், அவரைக் காப்பாற்ற நீங்கள் உதவிய விதம் ஒவ்வொன்றும் பாராட்டிற்கும் தகுதியானது. இந்த சிறந்த சேவையை தொடருங்கள் என்றுள்ளார். கரீம்நகர் போலீஸ் கமிஷனர் கமலாசன் ரெட்டியும் கான்ஸ்டபிளின் முயற்சியைப் பாராட்டியதோடு, அவரது பெயரை உயிர் காக்கும் விருதுக்கு பரிந்துரைத்து உள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: