• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பொம்மை துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு பைக் சாகசம்.. இளைஞர்கள் அட்டகாசம்..

பொம்மை துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு பைக் சாகசம்.. இளைஞர்கள் அட்டகாசம்..

Bike Stunt

Bike Stunt

நம்பர் பிளேட்டுகளை அகற்றி சாலையைச் சுற்றி வரும் இளைஞர்கள் தங்கள் சாகசங்களை வீடியோ எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

  • Share this:
    மேம்பாலத்தில் ஓடும் பைக் மீது நின்று வானத்தை நோக்கி பொம்மை துப்பாக்கியால் சுட்டு இளைஞர்கள் அட்டகாசம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியது.

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பைக் மீது நின்றபடி துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு இளைஞர்கள் அட்டகாசத்தில் (சாகசத்தில்) ஈடுபடும் வீடியோ வைரலாகி வருகிறது.

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் துர்க்கையம்மன் கோயில் உள்ளது. கோயில் எதிரே உள்ள கனகதுர்கா மேம்பாலத்தில் தொடர்ந்து சமீபகாலமாக இளைஞர்கள் பைக்கில் ஸ்டன்ட் செய்தபடியும் பொம்மை துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டும் வீடியோ எடுக்கின்றனர். விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் இவ்வாறு சாகச செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி அவ்வப்போது பைக் ரேஸ் நடத்துவதும் விஜயவாடா இளைஞர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது.

    மோட்டார் சைக்கிள்களில் நம்பர் பிளேட்டுகளை அகற்றி சாலையைச் சுற்றி வரும் இளைஞர்கள் தங்கள் சாகசங்களை வீடியோ எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே இது போன்ற இளைஞர்களை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    Also Read: ₹10 கோடி சேமிப்புடன் 35 வயதில் ஓய்வு பெற்ற பெண் – எப்படி சாத்தியமானது? – ரகசியம் அறிந்துகொள்ளுங்கள்..

    இதுகுறித்து விஜயவாடா டிராபிக் அடிஷனல் டிஜிபி சர்க்கார் கூறுகையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இது போல பைக் சாகசங்களில் ஈடுபட்ட 5 இளைஞர்களை பிடித்து, அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அவர்களுக்கு கவுன்சிலிங் அளித்ததாகவும், தற்போது மீண்டும் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன்  தேடி வரும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் மீது கட்டாயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: