ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஒற்றுமை யாத்திரையில் திடீரென ஓட்டம் எடுத்த ராகுல்... வைரலாகும் வீடியோ!

ஒற்றுமை யாத்திரையில் திடீரென ஓட்டம் எடுத்த ராகுல்... வைரலாகும் வீடியோ!

பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி ஓட்டம்

பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி ஓட்டம்

தெலங்கானா மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி உற்சாகத்துடன் ஓடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Hyderabad, India

  இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ராகுல்காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைப்பயணம் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கியது. பின்னர் கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ராகுல்காந்தி நடைபயணத்தைத் தொடர்ந்தார். இந்நிலையில், தற்போது தெலங்கானா மாநிலத்தில் நான்கு நாள்களாக நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

  ஐந்தாவது இன்று காலை தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியுடன் மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, பிற கட்சி எம்எல்ஏக்கள் உடனிருந்தனர். கோளப்பள்ளி என்ற இடத்தில் இந்த பயணம் தொடங்கிய நிலையில், திடீரென்று உற்சாகத்துடன் ஓட ஆரம்பித்தார் ராகுல் காந்தி. அப்போது உடன் இருந்த மாணவர்களும், இளைஞர்களும் அவருக்கு கம்பேனி கொடுக்கும் விதமாக ஓடத் தொடங்கினர்.

  இதையும் படிங்க: கங்கனா பாஜகவில் சேரலாம்... ஆனால்..? - தேசிய தலைவர் நட்டா வைத்த நிபந்தனை!

  மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி மற்ற கட்சி பிரமுகர்கள் முதலில் இதை கவனிக்காத நிலையில், பின்னர் சுதாரித்துக்கொண்டு அவர்களும் உற்சாகத்துடன் உடன் ஓடினர். ராகுல் காந்தி குஷியுடன் ஓடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

  காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இந்த வீடியோ கிளப்பை தங்கள் ட்விட்டர் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர். கட்சியின் இளைஞர் அணியின் தேசிய தலைவர் பிவி ஸ்ரீனிவாஸ் இந்த வீடியோவை பகிர்ந்து, நிறுத்த முடிந்தால் நிறுத்திப் பாருங்கள் என கமெண்ட் செய்துள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Rahul gandhi, Telangana, Viral Video