JCB -க்குள் சிக்கிக்கொண்ட 2 மலைப்பாம்புகள் - 4 மணி நேரம் போராடி மீட்ட வனத்துறை!

படம் ANI

பாம்பை மீட்கும் பணியில் ஈடுபட்ட சுவாதீன் குமார் (Swadhin Kumar ) பேசும்போது, பாம்புகளை மீட்பது உண்மையிலேயே சவாலாக இருந்ததாக தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஒடிசாவில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டிருந்த ஜேசிபி-க்குள் புகுந்த 2 மலைப்பாம்புகளை வனத்துறையினர் 4 மணி நேரம் போராடி மீட்டனர்.

பெர்ஹாம்பூர் பகுதியில் உள்ள பலிகுமுலா (Paligumula) ஜேசிபி எந்திரம் ஒன்று நீர்தேக்கம் ஒன்றை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அப்போது, கால்வாயில் இருக்கும் மண்ணை அள்ளி அப்புறப்படுத்திக்கொண்டிருந்தபோது, 2 மிகப்பெரிய மலைப்பாம்புகளை பார்த்து ஓட்டுநர் அதிர்ச்சியடைந்துள்ளார். அருகில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மக்களும் மலைப்பாம்புகள் பெரிதாக இருப்பதை பார்த்து பயந்துள்ளனர். இரண்டு பாம்புகளில் ஒன்று சீறியதுடன், அருகில் இருந்தவர்களை தாக்கவும் முயற்சி செய்துள்ளது. பின்னர், ஜே.சி.பியின் சூடாக இருக்கும் எஞ்சின் பகுதிக்குள் இரண்டு பாம்புகளும் நுழைந்துள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த வண்டியின் ஓட்டுநர் மற்றும் பொதுமக்கள் உடனடியாக வனத்துறைக்கும், பாம்பு நிபுணர்களுக்கும் தகவல்களை தெரிவித்தனர். இரவு 9.30 மணியளவில் சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர், வண்டியில் இருக்கும் பாம்புகளை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். எளிதாக இருக்கும் என்று அவர்கள் நினைத்திருந்த நிலையில், இரண்டு பாம்புகளும் ஒன்றோடு ஒன்று பிணைந்து எஞ்சினுக்குள் இறுக்கமாக சிக்கிக்கொண்டது. 

சிறியதாக இருந்த மலைம்பாம்பை ஒரு மணி நேரத்துக்குள் மீட்ட வனத்துறையினர், மற்றொரு பாம்பை மீட்பதற்கு போராடினர். சுமார் 4 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு இரண்டாவது பாம்பு ஜே.சி.பியில் இருந்து அகற்றப்பட்டது. சிறிய பாம்பு 7 அடி நீளமும், மற்றொரு பாம்பு 11 அடி நீளமும் இருந்தது. பாம்பின் முழு நீளத்தையும் பார்த்த அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வியப்படைந்தனர். 



இதனையடுத்து இரண்டு பாம்புகளையும் பத்திரமாக அருகில் இருந்த வனப்பகுதிக்கு எடுத்துச் சென்று வனத்துறையினர் விட்டனர். பாம்பை மீட்கும் பணியில் ஈடுபட்ட சுவாதீன் குமார் (Swadhin Kumar ) பேசும்போது, பாம்புகளை மீட்பது உண்மையிலேயே சவாலாக இருந்ததாக தெரிவித்தார். வண்டியின் bonnet பகுதிக்குள் நன்றாக நுழைந்திருந்ததாகவும், காயம் ஏற்படாதவாறு மீட்க வேண்டும் என செயல்பட்டதால், அவ்வளவு நேரமானதாக சுவாதீன் கூறினார்.

Also read... ஜனவரி 26ம் தேதி ரிலீசாகும் FAU-G கேம் - இதுவரை 4 மில்லியனுக்கும் அதிகமானோர் முன்பதிவு!

இதேபோல், கடந்த ஆண்டு ஜூலையில் ஒடிசாவின் கஞ்சம் (Ganjam) மாவட்டத்தில் உள்ள புருஜாஹரி (Burujhari) கிராமத்தில் 12 முதல் 15 அடி நீளமுள்ள ராஜநாகத்தை வனத்துறையினர் மீட்டனர். கிராமத்துக்கு அருகில் இருந்த பாழடைந்த கிணற்றில் பாம்பு இருப்பதை கண்ட மக்கள், வனத்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக நிகழ்விடத்துக்கு சென்ற அவர்கள், கிணற்றுக்குள் இருந்த ராஜநாகத்தை ஒரு மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர். பின்னர் அதனை அருகில் இருந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: