Home /News /national /

சாலையில் சரிந்து விழுந்த கற்கள்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள் - அதிர்ச்சி வீடியோ

சாலையில் சரிந்து விழுந்த கற்கள்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள் - அதிர்ச்சி வீடியோ

நிலச்சரிவு

நிலச்சரிவு

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலை - 109 முடக்கம் கண்டு கேதர்நாத் யாத்திரை தடைபட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Uttarkashi, India
வட மாநிலங்களில் பருவமழை காரணமாக வெள்ள பாதிப்பு, நிலச்சரிவு போன்ற சம்பவங்கள் கடந்த சில வாரங்களாக நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக, இமயமலை பிரதேசங்களான இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் நிலசரிவு சம்பவங்கள் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

இந்நிலையில், பிரபலமான புனித தலமான கேதர்நாத் அதை இணைக்கும் பகுதியான ருத்ரபிரயாக் ஆகிய பகுதிகளில் கடும் மழை காரணமாக மலைகளில் நிலைச்சரிவு ஏற்பட்டுள்ளது. ருத்ரப் பிரயாக் மாவட்டத்தில் தர்சாலி என்ற பகுதியில் மாலை குன்றின் பெரும் பகுதி சாலையில் சரிந்து விழுந்தது. இந்த அச்சுறுத்தலான காட்சி வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இது தேசிய நெடுஞ்சாலை - 109 என்பதால் சாலையை கடந்து கேதர்நாத் செல்ல வேண்டிய பக்தர்கள் நடு வழியில் சிக்கி தவிக்கின்றனர். பல கிமீ தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை முடக்கப்பட்டுள்ளது. விழுந்த பாறைகளை அகற்ற பல மணிநேரம் ஆகும் என்ற மாவட்ட ஆட்சியர் மயூர் தீக்ஷித், சீரமைப்பு பணிகள் நிறைவடந்த பின்னரே போக்குவரத்து மீண்டும் தொடரும் என்றுள்ளார். ஏற்கனவே உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்கு வருகை தந்த 42 பக்தர்கள் மழை மற்றும் நிலச்சரிவால் சிக்கித் தவித்த நிலையில் அவர்களை ஹெலிகாப்டர் மூலம் மாநில பேரிடர் மீட்பு குழு மீட்டது.

இவர்கள் ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் டெல்லியைச் சேர்ந்தவர்கள். மேலும் வியாஸ் பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்த 50 கிராமத்தினரும் பேரிடர் மீட்பு குழுவினரால் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
Published by:Kannan V
First published:

Tags: Flood, Uttarkhand, Viral Video

அடுத்த செய்தி