• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மருத்துவக் கல்லூரியில் நடமாடும் சிறுத்தை: வைரலாகும் சிசிடிவி காட்சி

மருத்துவக் கல்லூரியில் நடமாடும் சிறுத்தை: வைரலாகும் சிசிடிவி காட்சி

மருத்துவக் கல்லூரியில் நடமாடும் சிறுத்தை சிசிடிவி வீடியோ வைரல்

மருத்துவக் கல்லூரியில் நடமாடும் சிறுத்தை சிசிடிவி வீடியோ வைரல்

கர்நாடாகவில் உள்ளா சாம்ராஜ்நகர் மருத்துவக் கல்லூரி கட்டடத்துக்குள் சிறுத்தை ஒன்று நுழைந்து நடந்து செல்லும் சிசிடிவி வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

  • Share this:
    கர்நாடகா மாநிலத்தின் பந்திப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனவிலங்குகள் கணக்கெடுப்பில் தெரியவந்தது.

    கர்நாடாகாவின் பந்திப்பூர் வனப்பகுதியையொட்டி, எடபெட்டா மலைப்பகுதியில் சாம்ராஜ்நகர் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த மருத்துவக் கல்லூரியில் கடந்த புதன்கிழமை நள்ளிரவில் சிறுத்தையின் உறுமல் சப்தம் கேட்டதால், மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவக் கல்லூரிக்குள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி வீடியோப் பதிவுகளை ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது, சிறுத்தை ஒன்று மருத்துவக் கல்லூரிக்குள் புகுந்து அங்கும் இங்குமாக அலைந்தது தெரியவந்தது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.



    சிறுத்தை நடமாட்டம் குறித்து புகார் தெரிவிக்கப்பட்டு, மருத்துவக் கல்லூரிக்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையைத் தேடிப் பார்த்தபோது, அது மருத்துவக் கல்லூரிக்குள் இருந்து மற்றொரு வழியாக வெளியேறியது தெரியவந்தது. இருப்பினும், கர்நாடகா வனத்துறையினர் சிறுத்தை சென்ற இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். கர்நாடகாவில் சாம்ராஜ் நகர் மருத்துவக் கல்லூரிகள் சிறுத்தை நுழைந்த சம்பவம் கல்லூரி மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் படிக்க...மனைவி குழந்தைகளைக் கொலை செய்த கணவன் துாக்கிட்டு தற்கொலை... (வீடியோ)





    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: