Home /News /national /

இமாச்சலில் கொட்டித்தீர்க்கும் கனமழை.. நிலச்சரிவில் இடிந்து விழுந்த பாலம்- வைரலாகும் காட்சிகள்

இமாச்சலில் கொட்டித்தீர்க்கும் கனமழை.. நிலச்சரிவில் இடிந்து விழுந்த பாலம்- வைரலாகும் காட்சிகள்

கனமழை பாதிப்பால் நெடுஞ்சாலை பாலம் இடிந்து விழுந்தது

கனமழை பாதிப்பால் நெடுஞ்சாலை பாலம் இடிந்து விழுந்தது

இமாச்சலப் பிரதேசத்தில் இதுவரை மழை வெள்ள பாதிப்பு காரணமாக எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    கடும் மழை வெள்ள பாதிப்பு காரணமாக சண்டிகர்-சிம்லா நெடுஞ்சாலையில் பெரிய பாலம் ஒன்று இடிந்து விழும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது. இந்த சம்பவம் இமாச்சலப் பிரதேச மாநிலம் சோலான் என்ற பகுதியில் நடைபெற்றுள்ளது.

    நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பருவமழை காரணமாக கனமழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் தற்போது கனமழை பாதிப்பு தீவிரமாக உள்ளது. குறிப்பாக அங்கு திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை வெள்ள பாதிப்பும், ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்படுகிறது. அம்மாநிலத்தில் இதுவரை மழை வெள்ள பாதிப்பு காரணமாக எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். குல்லு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 55 வயது பெண் சாவேலு தேவி, 17 மாணவி கிருத்திகா ஆகியோர் உயிரிழந்துள்ளனர். அதே மாவட்டத்தில் மற்றொரு பகுதியில் ஏற்பட்ட மேகவெடிப்பில் 10 கடைகள், மூன்று கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

    இவ்வாறு கனமழையால் சிக்கித் தவித்து வரும் இமாச்சலில் என்எஃச் 5 தேசிய நெடுஞ்சாலையில் சிம்லா-கால்கா என்ற மேம்பாலம் உள்ளது. ஐந்து இணைப்பு பாலங்களை கொண்ட இந்த மேம்பாலத்தின் பெரிய பகுதி ஒன்று கடும் மழை பாதிப்பால் சரிந்து இடிந்து விழுந்துள்ளது. சுமார் 50 மீட்டர் அளவிலான பாலம் இதில் முற்றிலுமாக இடிந்துள்ளது.



    இதில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இரு வாகனங்கள் மட்டும் சேதமடைந்தன. பாலம் இடிந்து விழும் காட்சி வீடியோவாக பதியப்பட்டு அது தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்த சேதம் காரணமாக நெடுஞ்சாலை முடக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க:  தேசிய கொடி ஏற்றதா வீடுகளை கவனித்து எனக்கு புகைப்படம் அனுப்புங்கள்.. சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர்

    வெள்ள பாதிப்பு குறித்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர், மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Viral Video

    அடுத்த செய்தி