ஹோம் /நியூஸ் /இந்தியா /

சிலிர்க்க வைத்த போலீஸ்காரரின் செயல் - பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்ட வீடியோ

சிலிர்க்க வைத்த போலீஸ்காரரின் செயல் - பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்ட வீடியோ

RPF

RPF

ரயில்நிலையத்தில் இறங்க வேண்டிய இரண்டு பெண் பயணிகள் ரயில் வேகம் எடுப்பதை பொருட்படுத்தாமல் அவசரகதியில் ஓடும் ரயிலில் இருந்து உடமைகளுடன் பிளாட்பாரத்தில் குதித்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஒரு நொடி தாமத்திருந்தாலும் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்ற நிலையில் துரிதமாக செயல்பட்ட போலீஸ்காரர் ஒருவர், பெண்ணின் உயிரை காப்பாற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பாராட்டை பெற்று வருகிறது.

ரயில் நிலைய பிராட்ஃபாரங்களில் ரயில்கள் வரும்போது மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் பிளாட்பாரத்திற்கும் ரயில்களுக்கும் இடையே சிக்கிக் கொள்ளும் பெரும் ஆபத்து ஏற்படலாம். இந்த ஆபத்தை உணர்ந்து பாதுகாப்பான தூரத்தில் இல்லையென்றால் எவ்வித விபரீதமும் ஏற்பட்டுவிடக்கூடும். இதுபோல ஏற்கனவே பலரும் ரயில்களில் இருந்து இறங்கும்போதும், ஏறும்போதும் பிளாட்பார இடைவெளியில் சிக்கி ரயில்களால் நசுக்கப்பட்டு உயிரிழந்திருக்கின்றனர்.

ரயில்வே துறையினர் எவ்வளவோ விழிப்புணர்வை ஏற்படுத்தியும் கூட பயணிகள் பலரும் அலட்சியப்போக்குடன் செயல்படுவது தொடர்கிறது. அது போல அலட்சியமாக செயல்பட்ட பெண் பயணி ஒருவர் சாவை நெருங்கிய நேரத்தில் அங்கிருந்த ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரரின் துரித செயல்பாட்டால் உயிர் பிழைத்துள்ளார்.

கடந்த நவம்பர் 29ம் தேதியன்று மேற்குவங்க மாநிலம் புருலியா ரயில்நிலையத்தை வந்தடைந்த சந்த்ராகச்சி - ஆனந்த் விஹார் எக்ஸ்பிரஸ் ரயில், பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டது. ரயில் வேகமெடுத்துக் கொண்டிருந்த போது புருலியா ரயில்நிலையத்தில் இறங்க வேண்டிய இரண்டு பெண் பயணிகள் ரயில் வேகம் எடுப்பதை பொருட்படுத்தாமல் அவசரகதியில் ஓடும் ரயிலில் இருந்து உடமைகளுடன் பிளாட்பாரத்தில் குதித்தனர்.

Also read:   6 குழந்தைகளின் தாய், 14 வயது சிறுவனுடன் ஓட்டம் - 40 வயதில் மலர்ந்த காதல்

முதலில் இறங்கிய பெண்மணி பிளாட்பாரத்தில் சற்று தள்ளி குதித்தார். இருப்பினும் அவர் வேகமாக சென்ற ரயிலில் இருந்து குதித்ததால் கீழே விழுந்தார். அவரைத் தொடர்ந்து ரயிலில் இருந்து குதித்த மற்றொரு பெண்மணி தண்டவாளத்திற்கு அருகாமையிலேயே கால்வைத்ததால் ரயிலுக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையே இருந்த இடைவெளியில் சிக்கினார். ரயில் செல்லும் வேகத்தில் இழுக்கப்பட்டு தண்டவாளத்திற்குள் சென்றிருக்க வேண்டிய அப்பெண்ணை அங்கிருந்த ரயில்வேபாதுகாப்பு படை வீரர் பப்லு குமார் ஓடோடிச் சென்று துரித கதியில் மீட்டார்.

ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் பப்லு மட்டும் அப்பெண்ணை மீட்காவிட்டிருந்தால் அந்தப் பெண்ணுக்கு அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கக் கூடும். இதனிடையே பெண்ணின் உயிரை காப்பாற்றிய ஆர்.பி.எஃப் வீரர் பப்லுவை ரயில்நிலையத்தில் இருந்த பயணிகளும், சக அதிகாரிகளும் பாராட்டினர். பெண் ரயிலில் இருந்து இறங்கி கீழே விழுவதும், பப்லு காப்பாற்றுவதும் ரயில்நிலைய மேடையில் இருக்கும் சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பாராட்டை பெற்று வருகிறது.

Published by:Arun
First published:

Tags: Indian Railways, RPF, Viral Video