ஹோம் /நியூஸ் /இந்தியா /

மேடையில் நிர்மலா சீதாராமன் எதிர்பாராத விதமாக செய்த செயலை பாராட்டும் நெட்டிசன்கள்

மேடையில் நிர்மலா சீதாராமன் எதிர்பாராத விதமாக செய்த செயலை பாராட்டும் நெட்டிசன்கள்

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

மேடையில் பேசிக்கொண்டிருந்த NSDL நிர்வாக இயக்குனர் குடிக்க நீர் கேட்ட போது யாரும் எதிர்பாராத விதமாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாட்டர் பாட்டிலில் நீர் கொண்டு வந்து கொடுத்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  NSDL(National Securities Depository Limited) அமைப்பின் வெள்ளி விழா கொண்டாட்டம் மும்பையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார்.

  இந்த விழாவில் அமைப்பின் முன்னணி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். NSDL அமைப்பின் நிர்வாக இயக்குனர் பத்மஜா சுந்துரு விழாவில் உரையாற்றி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு தண்ணீர் தாகம் எடுக்கவே, தனக்கு குடிக்க தண்ணீர் வேண்டும் எனக் கேட்டார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனே தனது நாற்காலியில் இருந்து எழுந்து பத்மஜாவுக்கு பாட்டிலில் தண்ணீர் எடுத்து வந்து தந்துள்ளார்.

  மத்திய அமைச்சரின் இந்த செயலைப் பார்த்து அரங்கில் இருந்த அனைவரும் கரவொலி எழுப்பி பாராட்டினர். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகிவருகிறது. மத்திய அமைச்சரின் இந்த பண்பை பலரும் இணைய தளத்தில் பாராட்டிவருகின்றனர்.

  இந்த நிகழ்வானது சந்தையின் ஏகலையவன் என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு சந்தையின் அடிப்படைகளை போதித்து புதிய முதலீட்டாளர்களை ஈர்ப்பது எப்படி என விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு திட்டம் ஆங்கிலம் மட்டுமல்லாது, இந்தி மற்றும் ஏனைய பிராந்திய மொழிகளில் ஆன்லைன் மூலம் கிடைக்கிறது.

  இது குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், இந்த சந்தையில் ஏகலையவன் திட்டத்தின் மூலம், நிதி கல்வி தேவைப்படும் பலரை நம்மால் சென்று அடைய முடியும். மாணவர்களுக்கு கற்பிப்பதன் மூலம் சந்தையின் செயல்பாடுகள், அதன் அணுகுமுறை குறித்து மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்க முடியும்.

  இதை வெற்றிகரமாக செயல்படுத்தினால், பிரதமர் மோடியின் கனவான உலகத்தின் குரு என்ற இடத்தை நாம் அடையலாம். உலகில் உள்ள அனைத்து இளைஞர்களும் இதன் மூலம் பயனடைவார்கள். இந்த திட்டத்தில் நிதி சந்தை குறித்து மாணவர்களுக்கு பயிற்சியும் வழங்க திட்டமிட்டுள்ளோம்.

  இதையும் படிங்க: கேரளாவில் குழந்தைகளை குறிவைத்து வேகமாக பரவும் தக்காளி காய்ச்சல்... அறிகுறிகள், சிகிச்சைகள் என்ன?

  அமைப்பானது இந்தியாவின் ஒரே முதன்மையான மத்திய செக்யூரிட்ட டெப்பாசிட் அமைப்பாகும். இந்திய செக்யூரிட்டி சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதில் இந்த அமைப்பின் பங்களிப்பு அளப்பரியது. இதன் டிமெட் அக்கவுண்டை 167க்கும் நாட்டைச் சேர்ந்தவர்கள் வைத்துள்ளனர்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Nirmala Sitharaman, Viral Video