அஜாக்கிரதையால் நடந்த விபத்து... காரில் இருந்து விழுந்த குழந்தை...! சிசிடிவி காட்சிகள்

அஜாக்கிரதையால் நடந்த விபத்து... காரில் இருந்து விழுந்த குழந்தை...! சிசிடிவி காட்சிகள்
News18
  • News18
  • Last Updated: December 30, 2019, 10:56 AM IST
  • Share this:
வளைவில் வேகமாக திரும்பிய காரின் கதவு, திறந்துகொள்ள உள்ளே இருந்த குழந்தை திடீரென சாலையில் விழுந்தது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கேரள மாநிலம் மலப்புரம் - கொட்டக்கால் சாலையில் கடந்த 24-ம் தேதி இந்த விபத்து நடந்துள்ளது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த சாலையின் உள்ள வளைவில் வேகமாக வந்த கார் திரும்பியுள்ளது. அப்போது, காரின் கதவு சரியாக அடைக்காமல் இருந்துள்ளது.

கார் திரும்பும் போது, கதவு திறந்துகொள்ள உள்ளே இருந்த குழந்தை ஒன்று திடீரென சாலையில் விழுந்தது. பின்னால் வந்த வாகனம் சுதாரித்து பிரேக் பிடித்து நின்றது. குழந்தை இருந்த காரும் உடனே நிறுத்தப்பட்டு, உள்ளே இருந்து வந்த நபர் பதறியபடி குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார்.
பின்னால் வந்த வாகனம் உடனடியாக நிறுத்தப்பட்டதால், குழந்தை மீது மோதாமல் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Also See...
First published: December 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்