ஹோம் /நியூஸ் /இந்தியா /

குஜராத் பாலம் விபத்து.. பதைப்பதைக்கும் காட்சிகள் வெளியானது - பலி எண்ணிக்கை 134ஆக உயர்வு

குஜராத் பாலம் விபத்து.. பதைப்பதைக்கும் காட்சிகள் வெளியானது - பலி எண்ணிக்கை 134ஆக உயர்வு

பாலம் விபத்து சிசிடிவி காட்சிகள்

பாலம் விபத்து சிசிடிவி காட்சிகள்

குஜராத் மோர்பி பாலம் விபத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவிவருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Gujarat, India

  குஜராத் மாநிலம் மோர்பி நகரில் ஆற்றுப் பாலம் அறுந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்த விபத்து நிகழ்ந்த தருணத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. பாலத்தில் மக்கள் கயிறு கம்பிகளை பிடித்துக்கொண்டு நிற்கும் வேளையில், திடீரென்று கயிறுகள் அறுந்து பாலம் கவிழந்தது. இதில் நொடிப் பொழுதில் பாலத்தில் நின்றுகொண்டிருந்த மக்கள் ஆற்றில் விழுந்து மூழ்கினர்.

  ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட இந்த கேபிள் பாலத்தை இன்றளவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பாலத்தை புணரமைக்கும் பணியில் குஜராத் அரசு ஈடுபட்டு, 5 நாள்களுக்கு முன்னர் தான் மீண்டும் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தது.

  இந்த நிலையில் நேற்று வார விடுமுறை என்பதால் வழக்கத்தை விட அதிக மக்கள் இந்த பாலத்தில் பயணிக்க வந்துள்ளனர்.நேற்று மாலை நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் பாலத்தில் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது யாரும் எதிர்பாராத விதமாக பாலத்தின் கேபிள் அறுந்து ஆற்றுக்குள் விழுந்தது.சுமார் 100 பேரை மட்டுமே தாங்கும் இந்த பாலத்தில் சம்பவத்தின் போது 500 பேர் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

  இதையும் படிங்க: பாலியல் வழக்குகளில் இனி இரு விரல் சோதனை நடத்தக் கூடாது - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

  மீட்பு பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்ததாகக் கூறப்படும் நிலையில், இன்னும் இரண்டு மூன்று பேரை தேடும் பணிகள் மீதம் உள்ளதாக பேரிடர் மீட்பு குழு தெரிவித்துள்ளது. இந்த பாலம் விபத்தில் சிக்கி குஜராத் மாநில பாஜக எம்பி மோகன் குந்தாரியின் உறவினர்கள் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Accident, Disasters, Gujarat, PM Modi