ஹோம் /நியூஸ் /இந்தியா /

நடனம் ஆடியபோது இளைஞர் மரணம்.. தகவல் அறிந்து தந்தையும் உயிரிழந்த சோகம்- அதிர்ச்சி வீடியோ

நடனம் ஆடியபோது இளைஞர் மரணம்.. தகவல் அறிந்து தந்தையும் உயிரிழந்த சோகம்- அதிர்ச்சி வீடியோ

நடனமாடிக்கொண்டிருக்கும் போது சரிந்து விழுந்து உயிரிழந்த நபர்

நடனமாடிக்கொண்டிருக்கும் போது சரிந்து விழுந்து உயிரிழந்த நபர்

நவராத்திரி கொண்டாட்டதில் மகிழ்ச்சியுடன் ஆடிக்கொண்டிருந்த 35 வயது இளைஞர் திடீரென சரிந்து கீழே விழுந்து உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Palghar, India

  நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் கொரோனா லாக்டவுன் பிரச்சனைக்குப் பின் இந்தாண்டு கட்டுப்பாடுகள் இன்றி மீண்டும் பழைய உற்சாகத்துடன் நவராத்திரி விழா அமைந்துள்ளது. இதனால், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என மக்கள் இந்த நவராத்திரியை கொண்டாடிவருகின்றனர்.

  நவராத்திரி பண்டிகையின் முக்கிய நிகழ்வாக வட மாநிலங்களில் கர்பா என்ற நடன நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். மக்கள் அனைவரும் அரங்கில் ஒன்று திரண்டு வட்டமிட்டு நடனமாடுவதே இந்த கர்பா நடன நிகழ்ச்சியாகும். மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் விரார் என்ற பகுதியில் கடந்த சனிக்கிழமை கர்பா நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

  இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியுடன் ஆடிவந்த நிலையில், பாடலுக்கு நடனமாடிக்கொண்டிருந்த 35 வயது இளைஞரான மனிஷ் திடீரென்று சரிந்து கீழே விழுந்தார். கீழே விழுந்த மனிஷை உடனடியாக அவரது தந்தையும் அங்கிருந்த சிலரும் தூக்கி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

  மருத்துவமனைக்கு மனிஷ் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிருடன் இல்லை வழியிலேயே உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

  இதையும் படிங்க: 2025க்குள் 22 லட்சம் இந்திய ஐடி ஊழியர்கள் பணியைவிட்டு வெளியேற வாய்ப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

  இந்த அதிர்ச்சி செய்தியை கேட்டதும் மனிஷின் தந்தை நர்பத்தும் மருத்துவமனையிலேயே மயங்கி உயிரிழந்தார். இருவரும் இருதயக் கோளாறு காரணமாக உயிரிழந்தாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.கொண்டாட்டமாக நடனமாடிய 35 வயது இளைஞர் சரிந்து கீழே விழும் காட்சி அருகே இருந்தவர்களின் செல்போனில் பதிவாகி இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த சம்பவம் அங்கிருந்த கொண்டாட்ட மனநிலையை நீக்கி அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Garba dance, Heart attack, Maharashtra, Navaratri, Viral Video