தீயில் எரிந்த கடற்படை அதிகாரி மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்: கடனால் தற்கொலையா?

தீயில் எரிந்த கடற்படை அதிகாரி மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்: கடனால் தற்கொலையா?

சூரஜ் குமார் தூபே

அவர் 25 லட்சத்திற்கும் அதிகமான கடனில் இருந்ததாகவும், இதனால், கடன்கோரி 13 வங்கிகளை நாடி இருப்பதும் தெரியவந்துள்ளது.

 • Share this:
  தீயில் எரிந்த நிலையில் உயிரிழந்த, கடற்படை அதிகாரி சூரஜ் குமார் தூபே மரணம் தொடர்பான விசாரணையில், திடுக்கிடும் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அவர், கடனால் தற்கொலை செய்து கொண்டாரா என காவல்துறையினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

  சென்னையில் கடற்படை அதிகாரி கடத்தப்பட்டு மகாராஷ்டிரா காட்டுப்பகுதியில் எரித்து கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட வழக்கு குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி பகுதியைச் சேர்ந்த கடற்படை அதிகாரி சூரஜ் குமார் தூபே. இவர் கடந்த மாதம் இறுதியில், காணாமல் போனதாக பெற்றோர்கள் புகார் அளித்தனர். இந்நிலையில் மஹாராஷ்டிரா- குஜராத் எல்லை பகுதியில் எரிந்த நிலையில் அவர் மீட்கப்பட்டார்.

  இதனைத் தொடர்ந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூரஜ் குமார், 90 சதவீத தீக்காயம் ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய மகாராஷ்டிரா மாநில, பால்கர் மாவட்ட எஸ்.பி தத்ராத்ரே சிண்டே, கோவை ஐ.என்.எஸ் அக்ரனி (agrani)யில் பணிபுரிய ஜனவரி 30 தேதி வீட்டில் இருந்து கிளம்பியதாகவும், அதன் பின்னர் திடீரென செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆனதால், எங்கு சென்றுள்ளார் என தெரியாமல் பெற்றோர்கள் ஜார்கண்ட் மாநில போலிசாரிடம் புகார் அளித்திருந்ததாகவும் தெரிவித்தார்.

  மேலும், இது குறித்து நடத்தப்படட விசாரணையில் ஜனவரி 31 ஆம் தேதி சென்னை விமான நிலையம் அருகே சூரஜ், 3 பேர் மூலம் துப்பக்கி முனையில் கடத்தப்பட்டு, சென்னையில் ஒரு பகுதியில் 3 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததாகவும் கூறியிருந்தார்.

  அந்த கடத்தல் கும்பல், 10 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டி பணம் தராததல், சென்னையிலிருந்து கார் மூலம் மகாராஷ்டிரா- குஜராத் எல்லையில் காட்டுப்பகுதியில் வேவாஜி என்ற கிராமத்துக்கு கொண்டு சென்று, கடத்தல் கும்பல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியதாக சந்தேகிக்கப்பட்டது.

  இதுகுறித்து சென்னை காவல்துறையினர் உதவியுடன் விசாரணை நடைபெற்று வந்தது. தமிழகத்தில் பணியாற்ற வந்த கடற்படை அதிகாரி, சென்னையில் தூப்பக்கி முனையில் கடத்தப்பட்டதும், எரிந்த நிலையில் மீட்கப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், உயிரிழந்த சூரஜ் குமார் தூபே, ஷேர் மார்க்கெட்டில் பணம் இழந்திருப்பது தெரிய வந்துள்ளது. அவர் 25 லட்சத்திற்கும் அதிகமான கடனில் இருந்ததாகவும், இதனால், கடன்கோரி 13 வங்கிகளை நாடி இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் கடன் சுமையால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

  இந்நிலையில், அவர் பெட்ரோல் பங்கில் டீசல் வாங்கியிருப்பது கூடுதல் சந்தேகத்தை ஏற்டுத்தி இருப்பதாக காவல்துறை தரப்பில் சொல்லப்படுகின்றது.

  Must Read : குடுமிப்பிடி சண்டை: நடுத்தெருவில் மோதிக்கொண்ட ஊராட்சி மன்ற பெண் தலைவர்கள்

   

  இது குறித்து நடத்தப்பட்டுவரும் விசாரணையின் முடிவில்தான் இது கொலையா அல்லது தற்கொலையா என தெரியவரும்.
  Published by:Suresh V
  First published: