ராகுல் காந்தி மீது விழுந்த ஒளி... உயிருக்கு ஆபத்து என்று காங்கிரஸ் புகார்...!
ராகுல் காந்தி மீது விழுந்த ஒளி... உயிருக்கு ஆபத்து என்று காங்கிரஸ் புகார்...!
ராகுல் காந்தியின் தலையில் பாய்ந்த லேசர் ஒளி வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.
அமேதியில், ராகுல் தலையில் 7 முறை லேசர் ஒளிபட்டதாகவும், இதனால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் உள்துறை அமைச்சகத்துக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அவர் மீது விழுந்த ஒளி, புகைப்பட கலைஞர் ஒருவரின் கேமராவில் இருந்து வெளிப்பட்டது தெரியவந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்ற ராகுல் காந்தி, செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அவர் தலையில் 7 முறை லேசர் ஒளிபட்டதாகவும், இதனால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் உள்துறை அமைச்சகத்துக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியது.
இதையடுத்து உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில், விசாரணை நடத்திய சிறப்பு பாதுகாப்புக் குழு அதிகாரிகள், ராகுல் காந்தி பேசும்போது படம் பிடித்த காங்கிரஸ் கட்சியின் புகைப்பட கலைஞரின் கேமராவில் இருந்துதான் ஒளி வெளிப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த ஒளி ஸ்னைஃபர் துப்பாக்கி லேசர்ஒளி அல்ல. ராகுல் காந்தியின் பாதுகாப்பில் எந்தவிதமான குறைபாடும் இல்லை என உள்துறை அமைச்சகத்திடம் சிறப்பு பாதுகாப்புக் குழு அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.
உள்துறை அமைச்சகத்தின் இந்த அறிக்கையை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
Also see... வாக்காளர் அடையாள அட்டை இல்லையா... வாக்களிப்பது எப்படி?
Also see... அமேதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய பேரணியாக சென்ற ராகுல்!
Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.