ஹோம் /நியூஸ் /இந்தியா /

அந்தரங்க உறுப்பில் ஷாக் கொடுத்து சித்திரவதை.. காவல்துறை மீது பட்டியலின இளைஞர் புகார்..

அந்தரங்க உறுப்பில் ஷாக் கொடுத்து சித்திரவதை.. காவல்துறை மீது பட்டியலின இளைஞர் புகார்..

கோப்பு படம்

கோப்பு படம்

அவர்கள் தன் கை, கால்களை மடக்கி, பூட்ஸ் காலணியால் மிதித்து, தன் மீது சிறுநீரைத் தெளித்தனர் எனவும் கூறியுள்ளார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Bangalore [Bangalore], India

  விசாரணை என்ற பெயரில் தனது அந்தரங்க உறுப்பில் கரன்ட் ஷாக் கொடுத்து சித்திரவதை செய்ததாக பெங்களூரூ காவல்துறை மீது பட்டியலின இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

  கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, மாநில மனித உரிமைகள் ஆணையம் மற்றும் பெங்களூரு காவல்துறை ஆணையர் ஆகியோரிடம் பட்டியலின இளைஞர் ஒருவர் தன்னை காவல்துறையினர் விசாரணை என்ற அழைத்து சென்று சித்திரவதை செய்ததாக புகாரளித்துள்ளார்.

  அந்த புகாரில், செப்டம்பர் 4 அன்று, பெங்களூரூ பி.நாராயணபுரா பேருந்து நிலையத்திலிருந்து தன்னை 7 காவல்துறையினர் காரில் ஏற்றிக்கொண்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

  இதனையடுத்து காவல் ஆய்வாளர் மெல்வின் என்பவர் அறிவுறுத்தலின் பேரில், தன்னை மாடிக்கு அழைத்துச் சென்று மரக்கட்டைகள் மற்றும் கிரிக்கெட் மட்டைகளால் தாக்கியதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் செப்டம்பர் 4, 5, 6 ஆகிய நாட்களில் தன்னுடைய அந்தரங்க உறுப்பில் கரன்ட் ஷாக் கொடுத்து சித்ரவதை செய்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்கள் தன் கை, கால்களை மடக்கி, பூட்ஸ் காலணியால் மிதித்து, தன் மீது சிறுநீரைத் தெளித்தனர் எனவும் கூறியுள்ளார்.

  மேலும், “சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் என் மார்பில் உட்கார்ந்துகொண்டு என் முகத்தை பூட்ஸ் காலால் தாக்கினார். பின்னர் 12 நாட்களுக்குப் பிறகு நான் விடுவிக்கப்பட்டேன், ஆனால் இந்த சித்திரவதை பற்றி ஏதாவது வெளியில் சொன்னால், பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்துவிடுவோம் என்று அவர்கள் மிரட்டினர்" என்று கூறியிருக்கிறார்.

  இதையும் வாசிக்க: பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் கைது செய்யப்பட காரணம் என்ன ?

  காவல்துறை தரப்பினர், இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து தகவல் அளித்த டி.சி.பி பீமாசங்கர் குலேத், அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் கொடுத்ததாகவும் கொள்ளை முயற்சி வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் இவ்வாறு கூறுவதாக தெரிவித்தார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Bengaluru police, Crime News, Dalit