Home /News /national /

இனியும் இதுபோன்ற கோரசம்பவம் நடக்கக்கூடாது - பனிப்பாறை சரிவுகளை முன்னதாகவே கண்டறிய வழிகளை பரிந்துரைக்கும் வல்லுநர்கள்!

இனியும் இதுபோன்ற கோரசம்பவம் நடக்கக்கூடாது - பனிப்பாறை சரிவுகளை முன்னதாகவே கண்டறிய வழிகளை பரிந்துரைக்கும் வல்லுநர்கள்!

இந்தியாவுக்கான சமீபத்திய காலநிலை மாற்ற மதிப்பீட்டு அறிக்கையின்படி, ஒரு தசாப்தத்திற்கு 0.2 °C என்ற விகிதத்தில், காலநிலை மாற்றம் காரணமாக இமயமலையில் வெப்பம் அதிகரிக்கிறது. 

இந்தியாவுக்கான சமீபத்திய காலநிலை மாற்ற மதிப்பீட்டு அறிக்கையின்படி, ஒரு தசாப்தத்திற்கு 0.2 °C என்ற விகிதத்தில், காலநிலை மாற்றம் காரணமாக இமயமலையில் வெப்பம் அதிகரிக்கிறது. 

இந்தியாவுக்கான சமீபத்திய காலநிலை மாற்ற மதிப்பீட்டு அறிக்கையின்படி, ஒரு தசாப்தத்திற்கு 0.2 °C என்ற விகிதத்தில், காலநிலை மாற்றம் காரணமாக இமயமலையில் வெப்பம் அதிகரிக்கிறது. 

  • News18
  • 2 minute read
  • Last Updated :
    உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருகுக்கு காரணம் குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், பனிச்சரிவு அல்லது பனிப்பாறை ஏரி வெடிப்பால் ஏற்படும் வெள்ளம்  இதற்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    சமோலி மாவட்டத்தில் இமயமலைப் பகுதியில் ஜோஷிமடம் என்ற இடத்தில் நந்தாதேவி பனிப் பாறையின் ஒரு பகுதி உடைந்து சரிந்ததில், அங்கு ஓடும் கங்கை ஆற்றின் கிளை நதிகளில் திடீரென மிகப் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கிளை நதிகளில் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நீா் மின் நிலையங்கள் வெள்ளப்பெருக்கில் இடிந்து கடும் சேதமடைந்தன. 

    அந்த மின் நிலையங்களில் பணியாற்றி வந்தவா்களில், 200-க்கும் மேற்பட்டோரின் பேரின் நிலை குறித்து இதுவரை தெரியவரவில்லை. மலைப் பகுதியில் அமைந்திருந்த சில வீடுகளும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. கடந்த ஞாற்றுக்கிழமை ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல்போனவா்களில் 32 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மேலும் 197 பேரின் நிலை குறித்து இதுவரை தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கி இருப்பவா்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படை, ராணுவம், இந்திய விமானப்படை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. 

    இதுவரை 30 போ் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில், புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் காலநிலை விஞ்ஞானி டாக்டர் ராக்ஸி மேத்யூ கோல் News18 பத்திரிகையிடம் கூறியதாவது, "காலநிலை மாற்றம் மற்றும் புதிய பனி உருகியதால் உத்தரகண்ட் பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்தியாவுக்கான சமீபத்திய காலநிலை மாற்ற மதிப்பீட்டு அறிக்கையின்படி, ஒரு தசாப்தத்திற்கு 0.2 °C என்ற விகிதத்தில், காலநிலை மாற்றம் காரணமாக இமயமலையில் வெப்பம் அதிகரிக்கிறது. 

    மேலும் இமயமலையின் உயரத்தில் அதாவது 4000 மீட்டருக்கு மேல், வெப்பமயமாதல் விகிதம் ஒரு தசாப்தத்திற்கு 0.4°C வரை அதிகரித்துள்ளது. இந்த வெப்பநிலை மாற்றமே சமீபத்திய காலங்களில் இமயமலைப் பகுதியில் பனிப்பாறை கணிசமாக உருகுவதற்கும் சரிவதற்கும் வழிவகுக்கிறது" எனத் தெரிவித்தார். காலநிலை மாற்றம் மற்றும் ஆபத்தான பனிப்பாறை ஏரி அமைப்புகள் காரணமாக பனிப்பாறைகளில் விரைவான மாற்றங்கள் இருந்தபோதிலும், இமயமலை பனிப்பாறைகளின் கண்காணிப்பு இந்தியாவில் இன்னும் ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறது. 

    2018 இல் வெளியான இந்திய புவியியல் ஆய்வின்படி, இந்திய இமயமலை பனிப்பாறைகளின் வெகுஜன இருப்பு நிலையின் சுருக்கமான கணக்கெடுப்பில்,  இந்திய இமயமலைப் பிராந்தியத்தில் மொத்தம் 9,575 பனிப்பாறைகள் உள்ளன.

    அவற்றில் 15 மட்டுமே பனிப்பாறைகள் வெகுஜன சமநிலைக்கு இப்போது வரை ஆய்வு செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க, தற்போது உத்தரகண்டில் நிகழ்ந்துள்ள இந்த கோரா சம்பவங்களில் இருந்து மக்களை காக்க நாம் சிறந்த முறையில் தயாராக இருக்க வேண்டும் என்று பனிப்பாறை வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

    Also read... இறக்கும் தருவாயில் உண்மையான பெற்றோரை கண்டுபிடித்த சீனர் - 28 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்த சோகம்!

    நாம் தற்போது அவசரமாக செய்ய வேண்டிய நடவடிக்கை என்னவென்றால், பனிப்பாறை வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகளின் சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கும் அபாயகரமான மற்றும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை வரைபடமாக்கத் தொடங்க வேண்டும். பனிப்பாறை ஏரிகளின் மாற்றங்களைக் கண்காணித்தல் (Glacier Studies), பயனுள்ள எச்சரிக்கை அமைப்புகளை இணைத்தல் (Warning System) போன்றவற்றை செய்வதன் மூலம், உத்தரகண்டில் இந்த வாரம் நாம் கண்ட உயிர் இழப்புகள் மற்றும் சேதங்கள் பிற்காலத்தில் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும். 

    மிக முக்கியமாக, பனிப்பாறை ஆராய்ச்சியில் முதலீடு செய்வது அவசியம் எனத் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அப்பகுதியில் காலநிலையை அவ்வப்போது நம்மால் கணக்கிடமுடியும். தகுந்த எச்சரிக்கையையும் மக்களுக்கு வழங்க முடியும். இதுபோன்ற இயற்கை பேரழிவுகளை கட்டுப்படுத்த முடியாது. இருப்பினும், இந்தியாவின் உறுதியான "ஆபத்து மற்றும் பாதிப்பு வரைபடம்" (hazard and vulnerability mapping) இருந்தால், நம் சமூகங்கள், நம் கட்டுமானங்கள் மற்றும் நம் வளங்களை சிறப்பாக மாற்றியமைக்க முடியும் என்று டெரியில் உள்ள இமயமலை சூழலியல் மையத்தின் பனிப்பாறை நிபுணர் டாக்டர் ஸ்ரேஷ்ட் தயால் News18 இடம் கூறியுள்ளார்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Climate change, Disasters

    அடுத்த செய்தி