பணி மாறுதல் வேண்டுமானால் மனைவியை ஒரு இரவுக்கு அனுப்பி வை என்று உயர் அதிகாரி கூறியதால் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஊழியர் ஒருவர் உடலில் தீவைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், லக்கிம்பூர் கெரி பகுதியில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரப் பிரதேச மின்சார ஆணையத்தில் (Uttar pradesh power corporation) லைன்மேனாக வேலை செய்துவந்த நபர் ஒருவர் பாலியா காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள நகர் ஒன்றில் வசித்து வந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் பலமுறை அவர் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில்,பாலியா பகுதியில் தனக்கு பணிமாறுதல் வழங்க வேண்டும் என்று லைன்மேன் ஜூனியர் எஞ்சினியரிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு, பணி மாறுதல் வழங்க வேண்டும் என்றால் உன்னுடைய மனைவியை என்னுடன் அனுப்பி வை என அவர் அநாகரிகமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் லைன்மேன் கடும் மனவேதனைக்கு உள்ளானார்.
வேதனையில் இருந்துவந்த அவர் பாலியல் துணை மின் நிலையத்தின் முன்பாக தனது உடலில் தீவைத்து தற்கொலை செய்துகொண்டார். இறப்பதற்கு முன்பாக, ‘ ஜூனியர் எஞ்சினியர் தனது மனைவி குறித்து அநாகரிகமாக பேசியதாலேயே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: தண்டவாளத்தை கடக்கும் போது விபரீதம்.. ரயிலில் அடிபட்டு 5 பேர் பலி -ஆந்திராவில் பரபரப்பு
தற்கொலை செய்துகொண்ட நபரின் மனைவி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், எனது கணவர் மஹாபூருக்கும், சில சமயங்களில் அலிகஞ்சிற்கும், பின்னர் கோலாவுக்கும் மாற்றப்பட்டதால் வருத்தமடைந்தார். என் கணவர் பாலியாவில் போஸ்டிங் கொடுங்கள் என்று கேட்டபோது, முதலில் உங்கள் மனைவியை என்னுடன் படுக்க அனுப்புங்கள் என்று உயர் அதிகாரி கூறியுள்ளார்’ என தெரிவித்தார்.
மேலும் படிங்க: கொரோனா இழப்பீடு - விண்ணப்பங்களை ஆய்வு செய்ய மத்தியக் குழு வருகை
இந்த சம்பவம் சர்ச்சையாக உருவெடுத்ததையடுத்து, லக்கிம்பூர் கேரி மாவட்ட மாஜிஸ்திரேட் மகேந்திர பகதூர் சிங், ஜூனியர் இன்ஜினியரை சஸ்பெண்ட் செய்துள்ளார்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.