• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தவளையின் ரத்த செல்கள் அணுக்கரு உள்ளதா? ரிசோர்ஜிமெண்ட்டோன்னா என்ன தெரியுமா?- ஹரியானா போலீஸ் நுழைவுத் தேர்வில் முடியைப் பிய்த்துக் கொள்ளும் கேள்விகள்

தவளையின் ரத்த செல்கள் அணுக்கரு உள்ளதா? ரிசோர்ஜிமெண்ட்டோன்னா என்ன தெரியுமா?- ஹரியானா போலீஸ் நுழைவுத் தேர்வில் முடியைப் பிய்த்துக் கொள்ளும் கேள்விகள்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஹரியாணா போலீஸ் கான்ஸ்டபிள் நுழைவுத் தேர்வு கேள்விகள் ஐ.ஏ.எஸ். கணக்காக உள்ளன, முதல்வர், கேபினட் அமைச்சர்கள் உட்பட யாரும் எழுத முடியாது என்று அங்கு கடும் கேலி கலந்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.

  • Share this:
    ஹரியாணா போலீஸ் கான்ஸ்டபிள் நுழைவுத் தேர்வு கேள்விகள் ஐ.ஏ.எஸ். கணக்காக உள்ளன, முதல்வர், கேபினட் அமைச்சர்கள் உட்பட யாரும் எழுத முடியாது என்று அங்கு கடும் கேலி கலந்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    தவளையின் ரத்த அணுக்கள் பற்றிய கேள்வி, உலக வர்த்தக மையம், அனலிட் எனும் வத்தசைப் புழுக்கள் பற்றிய உடற்கூறு கேள்விகள், எல்லாவற்றுக்கும் மேலாக Risorgimento என்றால் என்ன? என்ற கேள்விகள் உள்லன, ரிசோர்ஜிமெண்ட்டோ என்பது இத்தாலியை ஒன்றாக இணைக்கும் 19ம் நூற்றாண்டு இயக்கமாகும் இதன் பொருள் “Rising Again” என்று அர்த்தம். கான்ஸ்டபிள், போலீஸ் வேலைக்கான நுழைவு தேர்வில் இப்படிக் கேட்டால் முடியைப் பிய்த்துக் கொள்ளாமல் என்ன செய்வதாம்?

    8.29 லட்சம் பேர் ஹரியானா மாநிலத்தில் கான்ஸ்டபிள் நுழைவு தேர்வு எழுதியவர்கள் இப்படித்தான் முடியைப் பிய்த்துக் கொண்டு தெறித்து ஓடிவிட்டனர். தவளையின் ரத்த செல்கள் அணுக்கருவால் ஆனதா, அணுக்கரு அகற்றப்பட்டதா? மூன்றாக உடைந்ததா, 2ஆக உடைவதா என்று பயாலஜி கேள்விகள் தலையைக் கிறுகிறுக்க வைத்துள்ளன.

    5,500 ஆண் கான்ஸ்டபிள் வேலைக்கான காலியிடங்கள் தான் உள்ளன. இதற்கு 8.29 லட்சம் பேர் நுழைவு தேர்வு எழுதுகின்றனர். ஹரியானா போலீஸே ஆடிப்போய்விட்டனர். இந்த லட்சணத்தில் இந்த நுழைவுத் தேர்வு 3 சுற்றுக்களாம், ஞாயிறு தொடங்கி நாளை புதனன்று முடிகிறது. இதற்கான தகுதி +2 படித்திருந்தால் போதும், +2 பாஸ் செய்தவர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகளா இவை என்று அங்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    இப்படி கேள்விகள் முடியைப் பிய்த்துக் கொள்ளும் வண்ணம் இருந்ததால் எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் 33 மார்க் எடுப்பார்களா என்று சவால் விடுத்துள்ளது. 12ம் வகுப்பு படித்தவர்களிடம் பொருளாதாரம், உலக வரலாறு, விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்று நிபுணர்களே விழிபிதுங்கும் கேள்விகளைக் கேட்டுள்ளனர்.

    ரிசோர்ஜிமெண்ட்டோ என்ற செய்தித்தாளை பப்ளிஷ் செய்தவர் யார்?

    Who published the newspaper Risorgimento?

    a) Joseph Garibaldi
    b) Joseph Mazzini
    c) Victor Emmanuel –II
    d) Count Di Cavour

    A body with pores and canals in walls is present in:

    a) Amelida
    b) Annelida
    c) Porifera
    d) Ctenophora

    Structure of XeF6 is:

    a) Distorted octahedral
    b) Square bipyramidal
    c) Distorted square planar
    d) Square planar

    இப்படியெல்லாம் கேட்டால் ஹரியாணா முதல்வர் 33 மார்க் எடுப்பாரா? இது என்ன கொடுமையான ஜோக்காக இருக்கிறது, இளைஞர்களை இப்படியா வதைப்பது? என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுர்ஜேவாலா சாடியுள்ளார். இந்திய தண்டனைச்சட்டம், ஹரியாணா மாநிலம் பற்றிய கேள்விகள், அரசியல் சாசனத்தில் உள்ள அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் பற்றிய கேள்விகளை விடுத்து எம்.ஏ. பி.எச்டி படிப்புக்குரிய தாவரவியல், உயிரியல், பன்னாட்டி வரலாறு கேள்விகளைக் கேட்டு இளைஞர்களை விரட்டி அடிப்பதா என்று கேள்வி எழுப்பியுள்ளது காங்கிரஸ்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: