முகப்பு /செய்தி /இந்தியா / இந்தி தெரியாது... எங்கள் மொழி தெரிந்த தலைமை செயலாளர்தான் வேணும்: மிசோரம் முதல்வர்

இந்தி தெரியாது... எங்கள் மொழி தெரிந்த தலைமை செயலாளர்தான் வேணும்: மிசோரம் முதல்வர்

மிசோரம் முதல்வர் சோரம்தங்கா

மிசோரம் முதல்வர் சோரம்தங்கா

மிசோரமின் தலைமை செயலாளராக ரேணு சர்மா (Renu Sharma) நியமிக்கப்பட்டுள்ளதற்கு முதலமைச்சர் சோரம்தங்கா (Zoramthanga) எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மிசோ மொழி தெரிந்தவரை தலைமை செயலாளராக நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

மிசோரம் தலைமை செயலாளராக ரேணு சர்மா நியமிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் சோரம்தங்கா தனது அமைச்சரவையில் உள்ளவர்களுக்கு இந்தி தெரியாது என்றும் மிசோ மொழி தெரிந்தவரை தலைமை செயலாளராக நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமின் புதிய தலைமை செயலாளராக ரேணு சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். பழைய தலைமைச் செயலாளர் திரு லால்னுன்மாவியா சுவாகோ ஓய்வு பெற்ற பிறகு,  தற்போதைய கூடுதல் தலைமைச் செயலாளர் திரு ஜே.சி. ராம்தங்காவை (மணிப்பூர் கேடர்) அடுத்த தலைமைச் செயலாளராக நியமிக்க முதலமைச்சர் சோரம்தங்கா (Zoramthanga) மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

இருப்பினும் உள்துறை அமைச்சகம் ரேணு சர்மாவை புதிய தலைமைச் செயலாளராக நியமித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சோரம்தங்கா கடிதம் எழுதியுள்ளார். அதில்,மிசோ மக்களுக்கு பெருமளவில் இந்தி புரியாது.  எனது அமைச்சரவை அமைச்சர்கள் யாருக்கும் ஹிந்தி புரியவில்லை, அவர்களில் சிலருக்கு ஆங்கில மொழியிலும் பிரச்சனைகள் உள்ளன.

இத்தகைய சூழலில் மிசோ மொழி தெரியாதவரை தலைமை செயலாளராக நியமித்தால் அவரால் திறமையாகவும் சிறப்பாகவும் செயல்பட முடியாது. திறமையான தலைமை செயலாளராகவும் திகழ முடியாது.  மிசோரம் மாநிலம் உதயமான தினத்தில்  இருந்து இதுவரை மியோ மொழி தெரியாதவர் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டது இல்லை.  எனவே, மிசோ மொழி தெரிந்தவரையே மிசோரமின் தலைமை செயலாளராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: யமுனை ஆற்றில் ரசாயன நுரையில் நீராடும் பக்தர்கள் - சாத் விழா கொண்டாட்டங்கள் வைரலாகும் புகைப்படங்கள்

top videos
    First published:

    Tags: Hindi, Mizoram