வாக்களித்ததை ஃபேஸ்புக்கில் வீடியோவாக வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய வாக்காளர்கள்!

மாதிரிப்படம்

வாக்களிக்கச் செல்லும் போது வாக்குச்சாவடிக்கு 100 மீட்டருக்குள் மொபைல் போன்களை கொண்டு செல்லவே கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்துகிறது

  • News18
  • Last Updated :
  • Share this:
மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தலில் வாக்களித்த சிலர் அதை ஃபேஸ்புக்கில் வீடியோவாக வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் படி வாக்களிக்கச் செல்லும் போது வாக்குச்சாவடிக்கு 100 மீட்டருக்குள் மொபைல் போன்களை கொண்டு செல்லவே கூடாது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால் மகராஷ்டிராவில் தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறிச் சிலர் தாங்கள் வாக்களித்ததை வீடியோவாக பதிவு செய்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர்.

வாக்களித்ததை வீடியோவாக ஃபேஸ்புக்கில் வெளியிட்டவர்களை அதை நீக்க உத்தரவிட்டது மட்டுமில்லாமல், அவர்கள் மீது சைபர் கிரைம் சட்ட பிரிவின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் மகாராஷ்டிரா தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் பார்க்க:
Published by:Tamilarasu J
First published: