கர்நாடகா இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.. ஆட்சியை தக்கவைக்க பாஜகவிற்கு 6 இடங்கள் கட்டாயம்

காங்கிரசிலிருந்து பிரிந்து சென்ற 11 எம்எல்ஏ-க்களுக்கும், ஜனதா தளத்திலிருந்து பிரிந்து சென்ற 3 எம்எல்ஏக்களுக்கும் பாஜக வாய்ப்பளித்துள்ளது.

கர்நாடகா இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.. ஆட்சியை தக்கவைக்க பாஜகவிற்கு 6 இடங்கள் கட்டாயம்
  • Share this:
கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளது. 15 தொகுதிகளில் 6 இடங்களில் பாஜக வெற்றி பெற்றால் மட்டுமே எடியூரப்பா ஆட்சி நீடிக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் யாருக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்தன. 37 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி முதலமைச்சர் ஆனார்.

பின்னர் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த 17 எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்ததால்,14 மாத கால கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. ராஜினாமா செய்த எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவற்றில் 15 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது. .


அதானி, காக்வாட், கோகக், எல்லபூர், கிருஷ்ணராஜபுரம், யஷ்வந்த்புரா, யர்கெரூர், ரானேபென்னூர், விஜயநகர், சிக்கபல்லபுரா, ஹோஸ்கோட், மகாலட்சுமி லேஅவுட், சிவாஜிநகர், கிருஷ்ணராஜபேட்டை, ஹன்சூர் ஆகிய 15 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

முஸ்கி மற்றும் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிகள் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை. 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடைபெறும். 15 தொகுதிகளுக்கான தேர்தலில் 165 பேர் போட்டியிடுகின்றனர்.

பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தளம் 12 இடங்களில் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. காங்கிரசிலிருந்து பிரிந்து சென்ற 11 எம்எல்ஏ-க்களுக்கும், ஜனதா தளத்திலிருந்து பிரிந்து சென்ற 3 எம்எல்ஏக்களுக்கும் பாஜக வாய்ப்பளித்துள்ளது.ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக குறைந்தது 6 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். மக்கள் பாதுகாப்பாக வாக்களிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 4,185 வாக்குச் சாவடிகளில் 884 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
First published: December 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading