உத்தரபிரதேசத்தில் 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளது.
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் ஏழு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற இருக்கிறது.தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் 412 கம்பெனி மத்திய துணை ராணுவப்படைகளை சேர்ந்த 50 ஆயிரம் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தை பொருத்தமட்டில் பாரதிய ஜனதா, சமாஜ்வாடி ஆகிய இரு கட்சிகளுக்கும் நேரடி போட்டி என்பது நிலவுகிறது. பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகளும் தேர்தல் களத்தில் உள்ளனர். முதல் கட்ட தேர்தலில் ஜாட் சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதிகள் அடங்கியுள்ளன. 9 தொகுதிகள் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகளுக்கான தனி தொகுதிகள் ஆகும். மொத்தம் 673 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 2 கோடியே 27 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி உள்ளவர்களாக உள்ளனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.