Home /News /national /

5 மாநில தேர்தல் - வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரம்..

5 மாநில தேர்தல் - வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரம்..

5 மாநில தேர்தல்

5 மாநில தேர்தல்

5 State Election | மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டி உள்ளார். வேட்பாளர்களுக்கு தெரியாமல் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்வதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது அவர் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
    உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டபேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்ளுக்கு கடந்த மாதம் 10 ஆம் தேதி தொடங்கி கடந்த 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது.

    அனைத்து மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (March 10) எண்ணப்படுகின்றன. கொரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கைகளுடன் வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. குறிப்பிட்ட இடைவெளியில் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதற்கான நடவக்டிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

    பெரும்பாலான தொகுதிகளில் முடிவுகள் பிற்பகலுக்குள் தெரிந்துவிடும். உத்தரப்பிரதேசத்தில் தனிப்பெரும்பான்மையுடன் 2-வது முறையாக பாஜக ஆட்சியமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. பஞ்சாப்-பில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க வாய்ப்புள்ள நிலையில், கோவா மற்றும் உத்தராகண்டில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

    இதனிடையே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டி உள்ளார். வேட்பாளர்களுக்கு தெரியாமல் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்வதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது அவர் புகார் தெரிவித்துள்ளார்.

    Also read... 'எங்களால் முடிந்த அளவுக்கு வெற்றி பெற போராடினோம்' - உ.பி. தேர்தல் கருத்துக் கணிப்பு குறித்து பிரியங்கா காந்தி கருத்து

    இந்நிலையில் வாக்குகளை எண்ணுவதற்கு முன்பாகவே ‘விவிபேட்’ ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் மனு இன்று விசாரணைக்கு வருகிது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு விவிபேட் கருவியில் பதிவாகி உள்ள ஒப்புகை சீட்டுகள் சரிபார்க்கப்படுவது வழக்கமாக உள்ளது.

    இது தொடர்பாக ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த ‘ரிட்’ மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரி முறையிடப்பட்டது. அப்போது நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தற்போது முறையிடுவது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த ரிட் மனு தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியதோடு, இன்று மனு விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Election, Election 2022

    அடுத்த செய்தி