டிஜிட்டலுக்கு மாறும் வாக்காளர் அடையாள அட்டை.. அடுத்தாண்டு 5 மாநில தேர்தல்களில் அமல்படுத்தவுள்ளதாக தகவல்

கோப்புப்படம்

அடுத்தாண்டு முதல் ஆதார் போலவே உங்கள் வாக்காளர் அடையாள அட்டையும் டிஜிட்டல் முறைக்கு மாறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  • Share this:
இந்தியத் தேர்தல் ஆணையத்திடமிருந்து (ECI) இறுதி முடிவு வந்ததும், வாக்காளர்கள் தங்கள் அடையாள அட்டை அல்லது வாக்காளர்களின் புகைப்பட அடையாள அட்டையை (EPIC) பதிவிறக்கம் செய்து டிஜிட்டல் பதிப்பைப் பயன்படுத்தி வாக்களிக்க முடியும். இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் வழியாக நியூஸ்18-க்குக் கிடைத்த தகவலின்படி, இந்தத் திட்டம் தயாராக உள்ளது என்றும் விரைவில் இந்த வசதி கிடைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புதிதாக பதிவுசெய்த வாக்காளர்கள் இந்த வசதியை தானாகப் பெறுவார்கள். ஏற்கனவே உள்ள வாக்காளர்கள் அதைப் பெறுவதற்கு வாக்காளர் ஹெல்ப்லைன் செயலி (Voter Helpline app) மூலம் சில வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சரியான பரிசீலனைக்குப் பின்னர், தேர்தல் ஆணையம் தனது ஒப்புதலைக் கொடுத்து இறுதித் திட்டத்தை வெளிப்படுத்த உள்ளது என்றும் தெரியவந்துள்ளது. பதிவிறக்கம் செய்யக்கூடிய டிஜிட்டல் வாக்காளர் அட்டை தவிர, தற்போதுள்ள அடையாள அட்டை வசதியும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

குடிமக்களுக்கு வாக்காளர் அட்டையை வழங்கும் வசதியை எளிதாக்கவே இந்த நடைமுறை வரவிருப்பதாகக் கூறப்படுகிறது. புதிய வாக்காளர்கள் தங்களின் பதிவுசெய்யப்பட்ட மொபைல் இணைப்பில் வாக்காளர் அட்டையைப் பதிவிறக்கிய பிறகு இந்த வசதியைப் பெறுவார்கள். வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்க அரசு அதிகாரிகளின் ஒப்புதல் வழங்கப்பட்டவுடன், விண்ணப்பதாரர் அதை டிஜிட்டல் வடிவத்தில் பெறலாம் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திட்டத்தின்படி, ஈபிஐசி-ன் (Electors Photo Identity Card) டிஜிட்டல் வடிவத்தில் வாக்காளரைப் பற்றிய தகவல்களைக் கொண்ட இரண்டு வெவ்வேறு க்யூஆர் குறியீடுகள் (QR codes) இருக்கும் என்கிறார்கள்.

Also read: நீங்கள் வாங்கும் மாத சம்பளம் குறையப் போகிறது.. காரணம் தெரியுமா?

ஒரு க்யூஆர் குறியீட்டில் வாக்காளரின் பெயர் மற்றும் பிற குறிப்பிட்ட விவரங்கள் இருக்கும். இரண்டாவது குறியீட்டில் வாக்காளரின் பிற தகவல்கள் இருக்கும். ஈபிஐசி-ன் பதிவிறக்கம் செய்யப்பட்ட பதிப்பில் க்யூஆர் குறியீடுகளில் வைக்கப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், வாக்களிக்கும் உரிமைகளைப் வாக்காளர்கள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்தத் திட்டம் உருவானதும், இதன் சேவைகளுக்காக வெளிநாட்டு வாக்காளர்களும் தங்கள் வாக்காளர் அட்டையைப் பதிவிறக்கம் செய்ய முடியும். தற்போது அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வேறு இடங்களுக்கு மாறிய வாக்காளர்களுக்கும், புதிய வாக்குச் சாவடிகளில் தங்கள் பெயர்களைச் சேர்க்கவும் இந்த வசதி உதவியாக இருக்கும். இதுதவிர, வாக்காளர் அட்டையை இழந்து புதிய அட்டைக்கு விண்ணப்பித்த வாக்காளர்களும் புதிய அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் இந்தச் சேவையைப் பயன்படுத்த முடியும். இதுகுறித்து கருத்துக் கணிப்புக் குழு இறுதி முடிவை எடுத்தவுடன், அடுத்த ஆண்டு ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் நாடு முழுவதும் உள்ள வாக்காளர்களுக்கு டிஜிட்டல் ஈபிஐசி சேவை கிடைக்கும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: