நிறைவடைந்தது முதல்கட்ட வாக்குப்பதிவு: தெலங்கானா 60%; ஆந்திரா 66% வாக்குப்பதிவு!

தெலங்கானவில் 17 தொகுதிகளிலும், ஆந்திராவில் 25 தொகுதிகளிலும் உத்தரகண்ட் 5 தொகுதிகளிலும் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது.

நிறைவடைந்தது முதல்கட்ட வாக்குப்பதிவு: தெலங்கானா 60%; ஆந்திரா 66% வாக்குப்பதிவு!
வாக்குப் பதிவு
  • News18
  • Last Updated: April 11, 2019, 8:08 PM IST
  • Share this:
நாடு முழுவதும் காலை 7 மணிக்குத் தொடங்கிய மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஆறு மணிக்கு நிறைவடைந்தது.

மக்களவைத் தேர்தல் இன்று முதல் அடுத்த மாதம் 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக அருணாசலப்பிரதேசம், ஆந்திரபிரதேசம், அஸ்ஸாம், பீகார், சட்டீஸ்கர், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா உள்ளிட்ட 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தெலங்கானவில் 17 தொகுதிகளிலும், ஆந்திராவில் 25 தொகுதிகளிலும், உத்தரகண்ட் 5 தொகுதிகளிலும் மேகாலயா, அருணாச்சலப் பிரதேசத்தில் 2 தொகுதிகளிலும் உத்தரப்பிரதேசத்தில் 8 தொகுதிகளிலும், மத்தியப் பிரதேசத்தில் 7 தொகுதிகளிலும் பீகாரில் 6 தொகுதிகளிலும் அசாமில் 5 தொகுதிகளிலும் ஒடிசாவில் 4 தொகுதிகளிலும் ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 2 தொகுதிகளிலும் சத்திஸ்கர், மிசோரம், திரிபுரா, மணிப்பூர், நாகாலாந்து, சிக்கிம், அந்தமான் நிக்கோபார் ஆகிய மாநிலங்களில் 1 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.


அதன்படி, ஐந்து மணி நிலவரப்படி, வாக்குப்பதிவு சதவீதம்:

பீகார் - 50.26%
தெலங்கானா - 60.57%மேகலாயா - 62%
உத்தரப்பிரதேசம் - 59.77%
மணிப்பூர் - 78.20%
லட்சத் தீவு - 65.9%
அசாம் - 68%
ஆந்திரப் பிரதேசம் - 66%
அந்தமான் நிக்கோபார் தீவுகள் - 70.67%
மேற்கு வங்கம் - 81%
திரிபுரா - 81.8%
நாகாலாந்து - 78%
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: April 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading