வாக்களித்தால் தங்க நகைக்குத் தள்ளுபடி... அசாம் மக்களுக்கு ஜாக்பாட்!

ஹைதராபாத்தில் உள்ள பள்ளி ஒன்று தங்களது பள்ளி மாணவர்கள் தேர்தலில் வாக்களித்த மையைக் காட்டினால் அவர்களது பிள்ளைகளுக்கு பரீட்சையில் கூடுதலாக 10 மதிப்பெண் அளிக்கப்படும் என்று அன்மையில் அறிவித்திருந்தது.

வாக்களித்தால் தங்க நகைக்குத் தள்ளுபடி... அசாம் மக்களுக்கு ஜாக்பாட்!
வாக்காளர்
  • News18
  • Last Updated: April 10, 2019, 1:41 PM IST
  • Share this:
அசாமின் தெற்கு பகுதி மாவட்டமான ஹைலாகந்தியில் வாக்காளர்களுக்கு பல்வேறு வணிகர்கள் தாங்கள் விற்கும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்குச் சலுகை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

அசாமின் ஹைலாகந்தி மாவட்டத்தில் கிராமப்புற மக்களவை விட குறைந்த அளவில் தான் நகரப் பகுதிகளில் வாக்களிக்கின்றனர். எனவே வணிகர்கள் வாக்காளர்களுக்குச் சலுகை வாங்கினால், அதன் பிறகாவது வாக்களிப்பார்கள் என்று அந்த மாவட்ட தேர்தல் அதிகாரி கீர்த்தி ஜால்லி கேட்டுக்கொண்டார்.

இதை ஏற்ற சில வணிகர்கள் சலுகைகள் வங்க முன்வந்துள்ளனர். நகைக்கடைகளில் செய்கூலிக்கு 15 சதவீத சலுகையும், உணவகங்களில் 10 முதல் 15 சதவீதம் சலுகை, மருந்து கடைகளில் 4 சதவீதம் சலுகை போன்றவையும் பெறலாம் என்று அறிவித்துள்ளனர்.


இந்தச் சலுகையை வாக்காளர்கள் பெற வேண்டும் என்றால் வாக்களிக்கும் போது கைகளில் வைக்கப்படும் மையை வந்து இந்தக் கடைகளில் காண்பிக்கும் போது சலுகை அளிக்கப்படும்.

அசாமில் ஏப்ரல் 11, 18 மற்றும் 23-ம் தேதிகளில் மக்களவைத் தேர்தல் மூன்று கட்டமாக நடைபெறுகிறது. இந்தச் சலுகைகள் ஏப்ரல் 18 மற்றும் 19-ம் தேதிகளில் மட்டும் கிடைக்கும் என்று ஹைலாகந்தி மாவட்ட வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹைதராபாத்தில் உள்ள பள்ளி ஒன்று தங்களது பள்ளி மாணவர்கள் தேர்தலில் வாக்களித்த மையைக் காட்டினால் அவர்களது பிள்ளைகளுக்கு பரீட்சையில் கூடுதலாக 10 மதிப்பெண் அளிக்கப்படும் என்று அண்மையில் அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.மேலும் பார்க்க:
First published: April 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்