• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • உள்ளூர் பொருட்களை வாங்குங்கள்: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

உள்ளூர் பொருட்களை வாங்குங்கள்: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

மன் கி பாத்

மன் கி பாத்

உள்ளூர் பொருட்களை வாங்குவதன் மூலம் உங்கள் பண்டிகையும் ஒளிரும், மேலும் ஒரு ஏழை சகோதரன் அல்லது சகோதரி, ஒரு கைவினைஞர் அல்லது நெசவாளியின் வீடும் ஒளிரும் என்று மன் கி பாத்(mann ki baat) நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

  • Share this:
    பிரதமர் நரேந்திர மோடி 82வது மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றினார். அப்போது, பண்டிகை காலங்களில் உள்ளூர் தயாரிப்புகளை வாங்க வேண்டும் என்றும் இதன் மூலம் ஏழை சகோதரர்களின் வீட்டிலும் ஒளி ஏற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    பிரதமர்  நரேந்திர மோடி  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என்னும் நிகழ்ச்சி மூலம் வானொலி வாயிலாக  நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.  அதன்படி, 82வது மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் இன்று அவர் உரையாற்றினார். அப்போது அவர், 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தியதன் பின் நாடு புதிய ஆர்வத்துடன் முன்னேறுகிறது. தடுப்பூசி திட்டத்தில் இந்தியா அடைந்த வெற்றி நாட்டின் வல்லமையை பறைசாற்றுகிறது என்று குறிப்பிட்டார்.

    போக்குவரத்திற்கும், வீடுகளில் பொருட்கள் விநியோகத்திற்கும், அவசர காலங்களில் உதவி செய்யவும், சட்டம் ஒழுங்கை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த இந்தியா முயன்று வருகிறது. இதுபோன்ற அனைத்து தேவைகளுக்கும் விரைவில் ட்ரோன்கள் பயன்படுத்தப்படும். தற்போது கோவிட் -19 தடுப்பூசிகளை விநியோகிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

    சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளான அக்.31 தேசிய ஒற்றுமை நாளாக கடைபிடிக்கப்படுகிறது. தேசிய ஒற்றுமையை ஊக்குவிக்கும் ஒரு செயலிலாவது நாம் ஈடுபட வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளை தவிர்க்க வேண்டும். அனைவரும் இணைந்து நமது நாட்டை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்து கொள்வோம் என்றும் தெரிவித்தார்.

    பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் உள்ளூர் பொருட்களுக்காக மக்கள் குரல் கொடுக்க வேண்டும். உள்ளூர் பொருட்களை பொதுமக்கள் வாங்க வேண்டும்.  உள்ளூர் பொருட்களை வாங்குவதன் மூலம் உங்கள் பண்டிகையும் ஒளிரும், மேலும் ஒரு ஏழை சகோதரன் அல்லது சகோதரி, ஒரு கைவினைஞர் அல்லது நெசவாளியின் வீடும் ஒளிரும். நாம் அனைவரும் இணைந்து தொடங்கியிருக்கும் பிரச்சாரம் இம்முறை திருவிழாக்களில் வலுவாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் வாங்கும் உள்ளூர் தயாரிப்புகளைப் பற்றி சமூக ஊடகங்களில் பகிருங்கள் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: