முகப்பு /செய்தி /இந்தியா / VK Sasikala : சசிகலாவிற்கு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை தொடரும் என அறிவிப்பு

VK Sasikala : சசிகலாவிற்கு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை தொடரும் என அறிவிப்பு

சசிகலா

சசிகலா

சசிகலா விடுதலை செய்யப்பட்டதால், மருத்துவமனை வளாகத்தில் திரண்டுள்ள அவரின் தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.

  • Last Updated :

விடுதலை செய்யப்பட்ட சசிகாலவிற்கு 4 முதல் 5 நாட்கள் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை தொடரும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்த அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.

விடுதலை செய்யப்பட்ட சசிகலாவுக்கு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை தொடருமா அல்லது வேறு ஏதேனும் மருத்துவமனைக்கு மாற்றப்படுவாரா என்ற கேள்விகள் எழுந்த நிலையில், அவருக்கு அங்கேயே தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா விடுதலை செய்யப்பட்டதால், மருத்துவமனை வளாகத்தில் திரண்டுள்ள அவரின் தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

மருத்துவ அறிக்கை

இந்நிலையில், சசிகலாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக கூறியுள்ள மருத்துவர்கள் தற்போது அவர், செயற்கை சுவாசம் இன்றி, இயல்பாக சுவாசிப்பதாகவும் உடல்நிலை தொடர்ந்து முன்னேறி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க... முறைப்படி விடுதலை செய்யப்பட்டார் சசிகலா: ஆதரவாளர்கள் உற்சாகம்

top videos

    கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அறிகுறிகள் காணப்படவில்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Bangalore, Sasikala