HOME»NEWS»NATIONAL»vk sasikala shifted to victoria hospital for ct scan sur

சிடி ஸ்கேன் எடுப்பதற்காக சசிகலா வேறு மருத்துவமனைக்கு மாற்றம்

வெளியே அழைத்துவரப்பட்ட சசிகலா தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்தார்.

சிடி ஸ்கேன் எடுப்பதற்காக சசிகலா வேறு மருத்துவமனைக்கு மாற்றம்
சசிகலா
  • Share this:

மூச்சுத் திறணல் காரணமாக பெங்களூருவில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா சிடி ஸ்கேன் எடுப்பதற்காக பவுரிங் அரசு மருத்துவமனையில் இருந்து, விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக வெளியே அழைத்துவரப்பட்ட சசிகலா தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி.தினகரன், சசிகலா நலமாக இருப்பதாகவும். உடல் நிலையை மருத்துவர்கள் சிறப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், சிடி ஸ்கேன் எடுத்தால் மேற்படி சிறப்பான சிகிச்சை கொடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க... சசிகலாவை மருத்துவர்கள் நன்றாக கவனித்து வருகின்றனர் - டி.டி.வி.தினகரன்



மேலும், தமிழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் அதிக அளவில் பெங்களூருவுக்கு வருவதை தவிர்க்குமாறும், தமிழக எல்லையிலேயே இருந்தால் நல்லது எனவும் காவல்துறையினர் தினகரனிடம் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

‘கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு, தொண்டர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் சின்னம்மாவைப் வரவேற்க வேண்டும்’ என்றும் அப்போது தினகரன் கேட்டுக் கொண்டார்.
Published by:Suresh V
First published: