சசிகலாவிற்கு சர்க்கரை அளவு சற்று அதிகரிப்பு - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

சசிகலாவிற்கு சர்க்கரை அளவு சற்று அதிகரிப்பு - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

சசிகலா

சசிகலாவிற்கு சர்க்கரை அளவு 205 இருப்பதால் அவருக்கு இன்சூலின் வழங்கப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.

  • Share this:
சசிகலாவின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் அவரின் சர்க்கரை அளவு சற்று அதிகரித்துள்ளதால் அவருக்கு இன்சூலின் வழங்கப்பட்டது என விக்டோரியா அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றுக்கான அறிகுறிகளும், மூச்சுத்திணறலும் குறைந்துள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

சசிகலாவின் உடல்நிலைய குறித்து தற்போது மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சசிகலாவிற்கு சர்க்கரை அளவு 205 இருப்பதால் அவருக்கு இன்சூலின் வழங்கப்பட்டது என்று தெரிவித்துள்ளனர். நேற்று இரவு சசிகலாவிற்கு சர்க்கரை அளவு 198 ஆக இருந்தது. தற்போது சற்று அதிகரித்து 205 ஆக உள்ளது. மேலும் வழக்கம் போல் சசிகலா சாப்பிடுவதாகவும், உதவியுடன் எழுந்து நடப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 98 சதவீதமாக இருப்பதாகவும், லிட்டராக இருந்த ஆக்சிஜன் அளவு 3 லிட்டராக குறைத்து வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.தீவிர சிகிச்சை பிரிவில் சசிகலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Published by:Vijay R
First published: