ஹோம் /நியூஸ் /இந்தியா /

விசாகப்பட்டினம் நச்சு வாயுக்கசிவு: முன்னாள் நிதித்துறை செயலாளர் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு!

விசாகப்பட்டினம் நச்சு வாயுக்கசிவு: முன்னாள் நிதித்துறை செயலாளர் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு!

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இந்த விபத்து தொடர்பாக விசாரித்து வருவதால் அந்த வழக்கோடு சேர்த்து இவ்வழக்கையும் விசாரிக்கவுள்ளனர்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இந்த விபத்து தொடர்பாக விசாரித்து வருவதால் அந்த வழக்கோடு சேர்த்து இவ்வழக்கையும் விசாரிக்கவுள்ளனர்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இந்த விபத்து தொடர்பாக விசாரித்து வருவதால் அந்த வழக்கோடு சேர்த்து இவ்வழக்கையும் விசாரிக்கவுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

விசாகப்பட்டினம் நச்சு வாயுக்கசிவு விவகாரம் தொடர்பாக முன்னாள் நிதித்துறை செயலாளர் இ.ஏ.எஸ்.சர்மா பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

விசாகப்பட்டினத்தில் நடந்த ரசாயனக் கசிவு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டையும், சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீட்டையும் எல்.ஜி.பாலிமர் நிறுவனத்திடமிருந்து பெறக் கோரி தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் முன்னாள் இந்திய நிதித்துறைச் செயலாளர் இ.ஏ.எஸ்.சர்மா தொடுத்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

கடந்த 7ம் தேதி அதிகாலை விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.ஆர். வெங்கடாபுரத்தில் எல்.ஜி.பாலிமர் எனும் பாலிஸ்டைரின் (Polystyrene) தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து ஸ்டைரின் நச்சு வாயுக் கசிந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். 2000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

அபாயகரமான ரசாயனங்களைக் கையாளும் இந்தத் தொழிற்சாலையானது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின் கீழ் மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறாமலேயே செயல்பட்டு வந்தது இந்த விபத்திற்குப் பிறகு தெரிய வந்தது. இந்த நிலையில் இந்தியாவின் முன்னாள் நிதித்துறை செயலாளரும் விசாகப்பட்டினத்தில் வசித்து வருபவருமான இ.ஏ.எஸ். சர்மா ஐ ஏ.எஸ்.(ஓய்வு) தென்மண்டல பசுனைத் தீர்பாயத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.

தனது மனுவில், சுற்றுச்சூழல் அனுமதியின்றி செயல்பட்டு வந்த இந்த ஆலை மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடும் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கான இழப்பீட்டையும் எல்.ஜி.பாலிமர் நிறுவனத்திடமிருந்தே பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த மனு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஏற்கெனவே தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு இந்த விபத்து தொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்து வருவதால் அந்த வழக்கோடு சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Also see:

First published:

Tags: National Green Tribunal, Vishakapatnam