ஆந்திராவில் மேலும் ஒரு விஷவாயு கசிவு சம்பவம் - இருவர் உயிரிழப்பு

விஷவாயு கசிந்த பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மேலும் ஒரு ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிவால் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  விசாகப்பட்டினத்தில் பரவாடா பகுதியில் செயல்பட்டு வரும் சாய்னார் லைப் சயின்ஸ் பார்மா என்ற தொழிற்சாலையில் இன்று காலை பெஞ்சிமிடோசோல் விஷ வாயு வெளியேறியுள்ளது.

  அப்போது பணியில் இருந்த 6 ஊழியர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதில், நரேந்திரா, கவுரி சங்கர் ஆகியோர் உயிரிழந்த நிலையில், மற்ற நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் படிக்க...

  80 காவலர்கள் பணியில் இருந்து விடுவிப்பு; உளவியல் பயிற்சி அளிக்க திட்டம் - திருச்சி டிஐஜி நடவடிக்கை

  விசாகப்பட்டினத்தில் எல்ஜி பாலிமர் தொழில்ற்சாலையில் கடந்த மாதம் ஏற்பட்ட விஷவாயு கசிவால் 12 பேர் மரணமடைந்த நிலையில், நான்கு நாட்களுக்கு முன் கர்னூலில் உள்ள தொழிற்சாலையில் விஷவாயு வெளியேறி ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
  Published by:Vaijayanthi S
  First published: