மோடி எழுதிய பாடலுக்கு பார்வையற்ற மாணவிகள் கார்பா நடனம்: வீடியோ

குஜராத்தி மொழியில் பிரதமர் மோடி எழுதிய பாடலுக்கு பார்வையில்லாத மாணவிகள் கார்பா நடனம் ஆடியுள்ளனர்.

news18
Updated: October 13, 2018, 10:58 AM IST
மோடி எழுதிய பாடலுக்கு பார்வையற்ற மாணவிகள் கார்பா நடனம்: வீடியோ
பிரதமர் மோடி
news18
Updated: October 13, 2018, 10:58 AM IST
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு குஜராத்தி மொழியில் பிரதமர் மோடி எழுதிய பாடலுக்கு பார்வையில்லாத மாணவிகள் அம்மாநில பாரம்பரிய கார்பா நடனத்தை ஆடி மகிழ்ந்தனர். 

வடமாநிலங்களில் பிரசித்தி பெற்ற நவராத்திரி பண்டிகை கோலாகலமாக தொடங்கியுள்ளது. பல முக்கிய நகரங்களில் ஆடல், பாடல் கொண்டாட்டங்கள், ஆலையங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், பிரதமர் மோடி தனது கைப்பட எழுதிய பாடல் ஒன்றுக்கு பார்வையற்ற மாணவிகள் சிறப்பாக கார்பா நடனம் ஆடியுள்ளனர்.

கார்பா நடனத்தை போற்றும் விதமாக குஜராத்தி மொழியில் பிரதமர் மோடி அந்த பாடலை எழுதியுள்ளார். அகமதாபாத்தில் உள்ள பள்ளியை சேர்ந்த சுமார் 200 பார்வையற்ற மாணவிகள் இந்த நடனத்தை சிறப்பாக அரங்கேற்றியுள்ளனர். ஏற்கனவே, இந்தியாவின் மகன் என்ற பெயரில் மோடி இந்தி பாடல் ஒன்றை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...
மாணவிகளின் நடனம் உணர்வுகளை தொட்டு விட்டது என பாடல் குறித்து ட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி, அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

First published: October 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...